மதுரை : மதுரையில் மருத்துவத்துறை நிர்வாக ஊழியர்கள்சங்க மாநில பொதுக்குழு கூட்டம் மாநில தலைவர் பிரபுராம் தலைமையில் நடந்தது.மாவட்ட செயலாளர் நீதிராஜன் வரவேற்றார்.
முன்னாள் மாநில பொதுச்செயலாளர் தியாகராஜன் துவக்கி வைத்தார். மாநில முன்னாள் தலைவர்கள் ரவிச்சந்திரன், லட்சுமணன், ஜீவானந்தம், அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ஜெயராஜராஜேஸ்வரன், ஜாக்டோ-ஜியோ ஒருங்கிணைப்பாளர் சந்திரன் பேசினர். ஜாக்டோ -ஜியோ போராட்டத்தில் சிறை தண்டனை பெற்றவர்கள் பாராட்டப்பட்டனர்.
அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும். ஜாக்டோ - ஜியோ வேலைநிறுத்த காலத்தை பணிக்காலமாக அறிவித்து பிடித்தம் செய்தசம்பளத்தை வழங்க வேண்டும். மருத்துவ துறையில் அடிப்படை பணிகளில் அவுட்சோர்சிங் முறையின்றி நிரந்தர அடிப்படையில் காலமுறை சம்பளத்தில் காலியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment