சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சுருக்கெழுத்து தட்டச்சர் பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு

ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளில் நேரடி நியமனம் செய்யும் பொருட்டு நடத்தப்பட்ட குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - 3 பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறவுள்ளது.









தமிழக தேர்வாணையத்தால் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்காக தேர்வு - IV 2015 - 2016, 2016 - 2017 மற்றும் 2017 - 2018ல் அடங்கிய பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு 2017 நவம்பர் 14ம் தேதி முதல் விண்ணப்பங்களைக் கொரியிருந்தன. 






பின்னர் இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு 2018 பிப்ரவரி 11ம் தேதி நடைபெற்று இத்தேர்வு முடிவுகளும் அதே ஆண்டு ஜூலை மாதம் 30ம் தேதி வெளியிடப்பட்டது.இந்நிலையில் இத்தேர்வில் உள்ள சுருக்கெழுத்து தட்டச்சர் நிலை - III பதவிக்கான மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு சென்னையில் நடைபெறவுள்ளது. பிராட்வே பேருந்து நிலையம் அருகில் உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் பிப்ரவரி 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை இது நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.






மேற்படி பதவிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் தற்காலிகப் பதிவெண்கள் அடங்கிய பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கான தேதி, நேரம் மற்றும் விபரங்கள் அடங்கிய அழைப்புக் கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பதாரர்களுக்குக் கலந்தாய்விற்கான அழைப்பினை தனியே அனுப்பப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 




குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் மூலமாக விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்படும்.இதற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவரவர் தொழில்நுட்ப கல்வித் தகுதி எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், ஒட்டுமொத்த தரவரிசை, இட ஒதுக்கீட்டு விதிகள், விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள் மற்றும் நிலவும் காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப கலந்தாய்விற்கு அனுமதிக்கப்படுவர். எனவே அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உத்தரவாதம் வழங்க இயலாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.




விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறு வாய்ப்பு அளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment