கடும் குளிர், பெரிய டெலஸ்கோப், கப்பல் பயணம்... சென்னைப் பள்ளி மாணவனின் பின்லாந்து பயணம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கடும் குளிர், பெரிய டெலஸ்கோப், கப்பல் பயணம்... சென்னைப் பள்ளி மாணவனின் பின்லாந்து பயணம்!

"பின்லாந்தில் கல்விச்சுற்றுலா முடித்துவிட்டு ஏரோபிளேன்ல வந்துட்டு இருந்தோம். நைட் 12 மணி, நானும் மற்ற எல்லாரும் நல்லா தூங்கிட்டு இருந்தோம். திடீர்னு லைட் எல்லாம் `சக்...சக்...சக்'னு ஆன் ஆகுது. மூணு ஏர்ஹோஸ்டர்ஸ் கேக் எடுத்துட்டு வராங்க. யாருக்கோ பிறந்தநாள்போல... இப்டிலாம் பிறந்தநாள் கொண்டாடுவாங்களானு நினைச்சிட்டு தூங்க ஆரம்பிச்சிட்டேன். 




அவங்க எம் பக்கத்துல வந்து என்ன எழுப்பி 'ஹேப்பி பர்த்டே பாலமுருகன்னு' சொன்னாங்க. நான் சந்தோஷப்பட்டதுக்கு அளவே இல்ல. ஏர்ஹோஸ்டர்ஸ்கிட்ட போய் என்னுடைய பிரண்ட்ஸ், 'அவனுக்குப் பிறந்த நாள், சர்ப்ரைஸ் குடுங்க'னு சொல்லிருக்காங்க. எல்லா பிரண்ட்ஸையும் கட்டிப் புடிச்சு தேங்க்ஸ் சொன்னேன். வாழ்க்கையில் மறக்க முடியாத பிறந்தநாளா மாத்திட்டாங்க" - என்று பின்லாந்து கல்விச் சுற்றுலா அனுபவத்தை துள்ளிக் குதித்து உற்சாகக் குரலில் நம்மோடு பகிரத் தொடங்கினார் சென்னை, ஆவிச்சி மேல்நிலைப்பள்ளி மாணவன் பாலமுருகன். அவர், நம்மையும் சில மணித்துளிகள் பின்லாந்துக்குக் கூட்டிச் செல்கிறார். வாங்க ஜாலியா போய்ட்டு வருவோம். தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை, கடந்த மாதம் 20-ம் தேதி அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் சிறந்து விளங்கும் 50 மாணவர்களைப் பின்லாந்து நாட்டுக்கு கல்விச் சுற்றுலா அழைத்துச் சென்றது. 



அதில், பாலமுருகனும் இடம்பெற்றிருந்தார். இவர் சுட்டி விகடனின் மாணவப் பத்திரிகைத் திட்டத்தில் அசத்தும் சுட்டி ஸ்டாரும்கூட. 2018-ல் நடைபெற்ற 'இன்ஸ்பைர் அவார்ட் எக்ஸிபிஷனில்' மேல்நிலைப் பிரிவில் முதலிடம் பெற்றதன் அடிப்படையில் தேர்வாகியுள்ளார். "பின்லாந்தில் சென்று இறங்கியவுடன் அப்படி குளிருச்சு!'' என்று தன் பயணக்கதையைச் சொல்லத் தொடங்கினார் பாலமுருகன். "பஸ்ல ஏறி தங்குற இடத்துக்குப் போனோம். டிராஃபிக்கே இல்ல, ஹார்ன் சவுண்ட் இல்ல, எல்லா வாகனத்துக்கும் இடையில் கேப், டூ வீலர் இல்ல, வேகமா போனாகூட கார்ல இருக்குற ஸ்கேனர் கோட் வச்சு அவங்க அக்கவுண்ட்ல இருந்து காசு எடுத்துப்பாங்களாம். 




இதுதான் நாங்க பார்த்த முதல் விஷயம். முதல்நாள், எங்கள ஒரு பள்ளிக்கு கூட்டிட்டு போனாங்க. ஸ்கூல்ல எல்லோரும் செல்போன், ஐபேட், டேப்னு வெச்சு படிச்சுட்டு இருக்காங்க. எல்லாருக்கும் ஷாக்காவே இருந்துச்சு. நாங்க கிளாஸ்ல கொஞ்ச நேரம் உட்கார்ந்து கவனிச்சோம். டெக்னாலஜிய அவ்ளோ யூஸ் பண்றாங்க. ஸ்கூல்ல குக்கிங் கிளாஸ், மெக்கானிக்கல் கிளாஸ், வுட் வொர்க்கிங்க் கிளாஸ் அப்டினு தனித்தனியா வச்சிருக்காங்க. யாரும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது. தனியா முடிவெடுக்கிற திறன் வேணும்ங்குறதுல அதிக கவனம் செலுத்துறாங்க. 





 சயின்ஸ் சென்டர்ருக்குக் கூட்டிட்டு போனாங்க. அறிவியல் விதிகள், கணக்கு இதெல்லாம் எளிமையா எப்படிப் புரிய வைக்கிறதுனு சொல்லிக்குடுத்தாங்க. தமிழ்நாட்டுல இந்த சிஸ்டெம்லாம் வந்தா எல்லாப் பசங்களும் ஸ்ட்ராங்கா படிப்பாங்க. மூளைக்கு வேலைகொடுக்கும் கேம்ஸ், கியூப் ஃபார்மிங்க் ஃபார்முலாஸ், நியூரான்ஸ் செயல்பாடு, ஈசி ரிலாக்சேஷன், 3டி மேக்கிங்க், கம்ப்யூட்டர் ஆப்ரேட்டிங்க் பற்றி சொன்னாங்க. அருமையான அனுபவமா இருந்துச்சு. எப்படியான கேம்ஸ் உங்களுக்குப் புடிக்கும்னு எங்ககிட்ட கருத்துகளும் கேட்டாங்க. டுர்கு யூனிவர்சிட்டில பெரிய டெலஸ்கோப் பார்த்தேன். 



அதைப் பார்த்ததே பெரிய அனுபவமா இருந்துச்சு. ஆனால், ஆப்ரேட் பண்ணி காமிக்கல. அவங்க சேட்டிலைட் எடுத்த அண்டங்கள், ஸ்டார்ஸ் புகைப்படங்கள் பார்த்தோம். பிளானிடோரியத்துல அண்டம் மோதுதல், பிளாக் ஹோல் தியரி, அணுவைப் பிளந்தால் நியூட்ரான், புரோட்டான், எலக்ட்ரான் தவிர டார்க் மேட்டர் ஒண்ணு இருக்குனு உலக நாடுகள் ரிசர்ச் பண்றாங்க. அதற்கான ரேஸ்ஸ தாங்குவதற்கான கண்டெய்னரை ரெடி பண்ற இன்ஃப்ராஸ்ட்ரக்க்ஷர் பார்த்தோம். இதெல்லாம் ரொம்ப பிரமிப்பா இருந்துச்சு. ஒவ்வொரு வீட்டுலயும் தேவையில்லாத பொருள்களை ரீசைக்கிளிங்க் செண்டர்க்குக் கொடுத்துவாங்களாம்... 




அவற்றை உபயோகமுள்ள, அழகான பொருளாக மாற்றி விற்பனைக்குக் கொண்டுவர்றாங்க. காசு இல்லாதவங்களுக்கும் பயன்படுற மாதிரி ஃப்ரீ ரூம் ஒண்ணு இருக்கு. புக்ஸ்ல இருந்து செருப்பு வரைக்கும் எல்லாமே அங்க இருக்கும். பழங்காலத்து வாசனையோட இருக்கும் பிரமாண்டமான சர்ச்க்குக் கூட்டிட்டு போனாங்க. மாதாவின் கையில் இயேசு கிறிஸ்து, யூதர்கள் உட்கார இடம், நிறைய பைபிள்ஸ், சர்ச் பத்தின வரலாறு பத்திலாம் தெரிஞ்சுக்க வழி பண்ணிருந்தாங்க. கப்பல்ல சுவீடன் போனோம். கப்பல பத்தின எல்லா தகவலும் சொன்னாங்க. கப்பல்ல பயணம், அவ்ளோ அழகா இருந்துச்சு. நோபல் மியூசியம் போனோம். யார்லாம் மெடல் வாங்கியிருக்காங்கனு ஒரு ஷீட் போய்ட்டே இருக்கும். 




90-களுக்கு மேல நோபல் பரிசு வாங்கினவங்களோட குரல்கள், கடிதங்கள், கையெழுத்து எல்லாமே ஆவணப்படுத்தி இருந்தாங்க. அடுத்து, அங்க இருக்குற தமிழ் சங்கத்தினர் எங்களை வந்து மீட் பண்ணாங்க. மெடல் குடுத்தாங்க. முக்கியமா வடை குடுத்தாங்க. வடையை பாத்ததுதான் உயிரே வந்துச்சு. திரும்பவும் கப்பல்ல பின்லாந்து வந்தோம். பின்லாந்து தமிழ்சங்கத்துல இருந்து பெரிய கலாசார நிகழ்ச்சியே நடத்திட்டாங்க. நாங்களும் கம்பு சுத்துறது, பரத நாட்டியம் ஆடுறது, பாட்டு பாடுறதுனு பண்ணோம். இந்தியர்கள் நிறைய பேரை நான் பார்த்தேன். தமிழ்நாட்டுல இருந்தும் சிலரை பார்த்தேன். நல்லா பேசினாங்க. வாழ்க்கையிலேயே மறக்க முடியாத அனுபவம் இந்த பின்லாந்து பயணம்" என்று மகிழ்ச்சியும் உணர்ச்சியும் ததும்ப பேசினார். பாலமுருகனின் அம்மா நம்மிடம் பேசும்போது "அவங்க அப்பா டூ வீலர் மெக்கானிக்தான். எங்களால வெளிநாட்டுக்கு கூட்டிட்டு போகலாம் முடியாது. இப்படியொரு வாய்ப்புக் கொடுத்ததுக்கு அரசுக்கு நன்றி. பாலமுருகனும் ரொம்ப கஷ்டப்பட்டு படிப்பான், 




புதுசு புதுசா ஏதாச்சும் செஞ்சிட்டே இருப்பான்" என்று பேசினார். வாழ்க்கையில் பயணமும் படிப்பும் ஒருவனின் சிந்தனையைக் கூர்மையாக்கும், செயல்களை மனிதத்தன்மையை இன்னும் மேம்படுத்தும். இவ்விரண்டும் ஒருசேர பள்ளிப்பருவத்தில் கிடைப்பது என்பது மகத்தானது. இதுபோன்ற முன்னெடுப்புகளை அரசு தொடர்ந்து செய்யும்போது மாணவர்கள் பலனடைவார்கள். கூடவே, அவர்கள் கண்டறிந்து சொல்லும் மாற்றத்தையும் பொருட்படுத்தினால் கல்வியில் பல மாற்றங்களையும் கொண்டுவர முடியும் 🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment