கேரட் சாறில் இருந்து லேசர் ஒளிக்கற்றை கண்டுபிடிப்பு : ஐஐடி மாணவர்கள் சாதனை! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கேரட் சாறில் இருந்து லேசர் ஒளிக்கற்றை கண்டுபிடிப்பு : ஐஐடி மாணவர்கள் சாதனை!

சென்னை ஐஐடி ஆராய்ச்சி மாணவர்கள் கேரட் சாறை பயன்படுத்தி பயோ லேசர் ஒளிக்கற்றையை உருவாக்கும் முறையை கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர். 










கதிர்வீச்சின் தூண்டுதல் உமிழ்வால் ஏற்படும் ஒளிப்பெருக்கம் லேசர் என்று அழைக்கப்படுகிறது. சில பொருட்களில் உள்ள எலட்ரான்கள் சக்தியை உள்வாங்கி கொண்டு பின்னர் மீண்டும் சகஜ நிலைக்கு திரும்பும். அப்போது எலட்ரான்களில் இருந்து வெளிப்படும் ஒளி அல்லது போட்டான்கள் தான் லேசர். இந்நிலையில் 20ம் நூற்றாண்டின் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பான லேசர் ஒளிக்கற்றையை, இயற்பியல் விஞ்ஞானி சர்.சி.வி.ராமனின் கோட்பாடுகளின் மூலம் கேரட் சாறை பயன்படுத்தி சென்னை ஐஐடி மாணவர் உருவாக்கியுள்ளனர். 






கேரட் சாறில் உள்ள கரோடின் செல்லுலோஸில் இருந்து உருவாக்கப்பட்ட இந்த லேசர் ஒளிக்கற்றையானது முழுக்க முழுக்க நம்பகமானதாகவும், வலுவானதாகவும் இருக்கும் என மாணவர்கள் கூறியுள்ளனர். இது எந்த வெப்பநிலையிலும் சிறப்பான செயல்பாட்டை கொண்டது என்றும், இயற்கை, நம்பகத்தன்மை, எளிமை, பாதுகாப்பு உள்ளிட்ட சாதகமான அம்சம்களை கொண்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த லேசர் ஒளிக்கற்றையை பயன்படுத்தி கலப்படம், தூய்மை கேடு மற்றும் உடல் வெப்பநிலை ஆகியவற்றை கண்டறியலாம் என்றும் ஐஐடி மாணவர் குழு தெரிவித்துள்ளது.


No comments:

Post a Comment

Please Comment