செல்போன், பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலி: சென்னை காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

செல்போன், பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் டிஜிகாப் செயலி: சென்னை காவல் ஆணையர் அறிமுகம் செய்து வைத்தார்

சென்னை வேப்பேரியில் டிஜிகாப்(DIGICOP) என்ற மொபைல் செயலியை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் அறிமுகம் செய்து வைத்துள்ளார். செல்போன், பைக் திருட்டு குறித்து புகாரளிக்கும் வகையிலும், அவை குறித்த தகவல்களை பெறும் வகையிலும் டிஜிகாப் செயலி உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 







சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி சிசிடிவி தொடர்பான விழிப்புணர்வு சிடியை காவல் ஆணையரிடமிருந்து பெற்றுக்கொண்டார். பின்னர், நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த செயலி மூலம் காவல் துறைக்கும் பொதுமக்களுக்குமான இடைவெளி குறையும் என நம்பிக்கை தெரிவித்தார். தொடர்ந்து பேசிய காவல் ஆணையர் ஏ.கே. விஸ்வநாதன், டிஜிகாப் செயலிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து, தொலைந்து போன செல்போன்களை விற்க முடியாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். 



 மேலும் பேசிய அவர், 18,000 மொபைல் போன்களின் தகவல்கள் இந்த டிஜிகாப் செயலியில் உள்ளது. பழைய மொபைலை வாங்கும் போது அது திருடப்பட்ட மொபைலா என்பதை இந்த செயலி மூலம் அறியலாம். செல்போன் திருட்டை தடுக்க வேண்டும் என்ற நோக்கில் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. திருட்டுப்போன செல்போன்கள் மீட்கப்பட்ட பின்னர் அதன் தகவல்களை டிஜிகாப் செயலி மூலம் அறியலாம் என அவர் கூறியுள்ளார். 




மேலும், சிசிடிவி பொருத்த வேண்டியதன் அவசியம் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினோம். பொதுமக்கள் பங்களிப்போடு பல ஆயிரம் சிசிடிவி பொருத்தப்பட்டுள்ளது சென்னையில் மட்டும் தான். சென்னையில் எந்த குற்றம் நடந்தாலும் அதை கண்டுபிடிக்க சிசிடிவி உபயோகமா இருக்கிறது. பழைய வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளதால் காவல்நிலையங்கள் சுத்தமின்றி கிடந்தன. மாநாகராட்சி உதவியுடன் காவல் நிலையத்தில் தேங்கி கிடந்த வாகனங்கள் அற்றம் செய்யப்பட்டுள்ளது. 



பழைய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் வெற்றி பெற்றுள்ளோம் என அவர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment