நீலகிரி மாவட்ட தொடக்க தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் 400 ஆசிரியர்கள் பணியிட மாறுதல் உத்தரவை பெறாவிட்டால் 17பி., துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கை பாயும் என கல்வித்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இதனால் ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.ஜாக்டோ -ஜியோ அமைப்பின் சார்பில் கடந்த மாதம் நடந்த வேலை நிறுத்த போராட்டத்தில் பங்கேற்றதாக கூறி நீலகிரி மாவட்டத்தில் தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் 400 ஆசிரியர்களை கல்வித்துறை ஒரே சமயத்தில் பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. தொடக்க கல்வி ஆசிரியர்கள் பல ஆண்டுகளாக ஒரே பள்ளியில் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் கோரிக்கைளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களை பழிவாங்கும் நோக்கில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த பணி மாறுதல் உத்தரவால் ஆசிரியர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர்.
இதனிடையே ஆசிரியர்களை பழிவாங்காமல், மீண்டும் அந்தந்த பள்ளிகளிலேயே பணியமர்த்த வேண்டும் என பெற்றோர்கள் மற்றும் மாணவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இருப்பினும் இதனை கல்வித்துறை கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான பணி மாறுதல் உத்தரவு நேற்று முதல் அந்தந்த தொடக்க கல்வி அலுவலர் அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது. ஆசிரியர்கள் உடனடியாக பணிமாறுதல் உத்தரவை பெற்று அன்றைய தினமே சம்பந்தப்பட்ட பள்ளியில் பணிக்கு சேர வேண்டும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது. தவறும்பட்சத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீது துறை நீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விதமாக 17பி., பதிவு செய்யப்படும் எனவும் எச்சரித்துள்ளது.
இருப்பினும் மாவட்டம் முழுவதும் பெரும்பாலான ஆசிரியர்கள் பணியிட மாறுதல் உத்தரவுகளை வாங்கவில்லை.
இதுகுறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், குற்றச்சாட்டு குறித்து விளக்கம் கேட்கப்பட்டு அதில் திருப்தியில்லை என்றால் தான் 17பி., பதிவு செய்ய வேண்டும். பழிவாங்கும் நோக்கில் எடுத்தவுடன் 17பி பதிவு செய்யப்படும் என்பது ஏற்புடையது அல்ல, என்றனர். 🌐🙏Dear Admins🙋♂🙋♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂
No comments:
Post a Comment
Please Comment