முருங்கை கீரை உண்பதால் இவ்வளவு நன்மைகளா - ThulirKalvi Blogs

Latest

Search This Site

முருங்கை கீரை உண்பதால் இவ்வளவு நன்மைகளா

முருங்கை கீரை உண்பதால் இவ்வளவு நன்மைகளா? கீரைகளில் மிகவும் சிறந்த ஒன்று முருங்கை கீரை. இதில் ஏராளமான சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. முருங்கை கீரையில் அதிக அளவு வைட்டமின் எ, கால்சியம், மெக்னீசியம், இரும்புசத்து, பொட்டாசியம் புரதம், நார்சத்து போன்ற அனைத்து சத்துக்கள் நிறைந்துள்ளது. முருங்கை கீரையில் அதிக அளவு வைட்டமின் எ சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் 100 கிராம் முருங்கை கீரை எடுத்துக்கொண்டு வந்தால் உங்களின் கண் பார்வை கூர்மையாக இருக்கும். மேலும் உங்களுக்கு பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவும். முருங்கை கீரையில் அதிக அளவில் இரும்புசத்து நிறைந்துள்ளது. 
I
இது உங்கள் உடம்பில் இரத்த உற்பத்தியினை அதிகரிக்கின்றது மேலும் உங்களுக்கு இரத்த சோகை போன்ற நோய் எற்படாமல் தடுக்க உதவுகின்றது. முருங்கையில் மிகவும் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் அளவில் தினமும் முருங்கை கீரை தினமும் எடுத்துக்கொண்டு வந்தால் உங்களுக்கு மலசிக்கல் மற்றும் குடல் பிரச்சினை போன்ற பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும். முருங்கை கீரையில் அதிக அளவில் நார்சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் உண்டு வந்தால் உங்கள் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் அனைத்தையும் கரைக்க உதவும். மேலும் உங்களை கட்டுக்கோப்புடன் வைக்க உதவும். முருங்கை கீரையில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது உங்கள் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவும்.

 மேலும் வைட்டமின் சி உங்களின் சருமம் மற்றும் முடியின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கிய வழி வகுக்கின்றது. முருங்கை கீரையில் அதிக அளவில் கால்சியம் மற்றும் மெக்னீசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது. உணவில் உள்ள கால்சியம் சத்துக்களை உறிஞ்சுவதில் மெக்னீசியம் மிக மிக பயனுள்ளதாய் இருக்கும். மேலும் கால்சியம் சத்தானது உங்கள் பற்கள் மற்றும் எலும்புகளை வலுவாகும். எனவே ஆரோக்கியமாக வாழ தினமும் 100 கிராம் அளவு முருங்கை கீரையினை உட்கொண்டு வாருங்கள் நண்பர்களே

No comments:

Post a Comment

Please Comment