கரூர்: வன்கொடுமை பாதிப்பு மகளிருக்கு, மருத்துவ, சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்யும், 'ஒன் ஸ்டாப் சென்டரில்' உள்ள பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கரூர் மாவட்டத்தில்,
வன்கொடுமையால் பாதிக்கப்படும் மகளிருக்கு மருத்துவ வசதி அளித்தல், சட்டப்பூர்வ நடவடிக்கைக்கு உதவி செய்தல், மனரீதியான ஆலோசனை வழங்குவதற்காக மத்தியஅரசால் சக்தி திட்டத்தின் கீழ், 'ஒன் ஸ்டாப் சென்டர்' செயல்பட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த மையத்தில் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இதில், நிர்வகிப்பவர் பதவிக்கு, சட்டப் படிப்பு முதுநிலை மற்றும் பெண் வன்கொடுமை தொடர்பாக ஐந்து ஆண்டுகள் பணிபுரிந்த முன்அனுபவம் வேண்டும். வழக்கு பணியாளர் பணியிடத்திற்கு சட்டப்படிப்பு, முதுநிலையுடன் வன்கொடுமை தொடர்பாக மூன்று ஆண்டுகள் பணிபுரிந்து முன்அனுபவம் வேண்டும். தகவல் தொழில்நுட்ப பணிக்கு, இளநிலை பட்டயப் படிப்புடன் கணினி முன் அனுபவம் மூன்று ஆண்டுகள் தேவை. பல்நோக்கு உதவியாளர் பணிக்கு, மூன்று ஆண்டுகள் முன் அனுபவம் உள்ளவர்கள் தேவை. விண்ணப்பங்களை மார்ச், 1க்குள் மாவட்ட சமூகநல அலுவலர், கலெக்டர் அலுவலக வளாகம், கரூர் என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment