திருத்தணி:அரசு பள்ளியில், தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள், வீடு வீடாக சென்று, துண்டு பிரசுரம் வழங்கி வருகின்றனர்.அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை ஆண்டுதோறும் குறைந்து வருகிறது. அடுத்த கல்வியாண்டில், அரசு பள்ளியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று விழிப்புணர்வு ஏற்படுத்தி, பள்ளியில் உள்ள வசதிகள் குறித்து, துண்டு பிரசுரம் வழங்க வேண்டும் என, கல்வி அதிகாரிகள் உத்தரவிட்டனர்.இதையடுத்து, திருத்தணி, ஆலமரம் தெருவில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி ஆசிரியர்கள், மாணவர் சேர்க்கை பணிகளை மேற்கொண்டனர்.பள்ளி தலைமை ஆசிரியர் சுமதி தலைமையில், ஏழு ஆசிரியர்கள் தணிகாசலம்மன் கோவில் தெரு, ஆலமரம் தெரு ஆகிய இடங்களில் வீடு வீடாக சென்று, பள்ளியில் உள்ள வசதிகள் குறித்தானதுண்டு பிரசுரங்கள் வழங்கினர்.இப்போது, தங்களது குழந்தைகளை, வரும் கல்வியாண்டில் அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என, விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
Search This Site
New
மாணவர் தீவிர சேர்க்கை: வீடு வீடாக துண்டு பிரசுரம்
Educational News
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
Please Comment