தன் கிராமத்தில் உள்ள அனைத்து தாத்தா பாட்டிகளையும் விமானம் ஏற்றிய அதிசய இளைஞர்..? விகாஸ் க்யானி (vikas Jyani) ஹரியானாவின் ஹிஸார் மாவட்டத்தின் சாரங்பூர் கிரமத்தைச் சேர்ந்தவர். இவர் தந்தை ஒரு அரசு வங்கி ஊழியர்.
பொதுவாகவே இவர்கள் கிராமத்தில் மெத்தப் படித்தவர்கள் எவரும் கிடையாது. ஒரு பட்டப் படிப்பு படிபப்தே மிகப் பெரிய சாதனை தான்.
ஆனால் இகாஸுக்கு விமானி ஆக வேண்டும் என்பது கனவு. ஒருவழியாக போராடி விமானி ஆகிவிட்டார்.
இப்போது என்ன எல்லோருக்கு இனிப்பு, அல்லது விலை உயர்ந்த உணவகங்களில் பார்ட்டி என வைக்கவில்லை. மாறாக ஒரு காரியத்தைச் செய்து மொத்த கிராமத்தையும் சந்தோஷத்தில் ஆழ்த்தினார்.
போடு டிக்கேட்ட
இது எப்புடி..?
தன் சாரங்க்பூர் கிராமத்தில் 70 வயதுக்குமேற்பட்ட 22 தாத்தா பாட்டிகள் அனைவருக்கும் தில்லி முதல் அம்ரித்ஸர் வரையான விமான டிக்கேட்டுகளை புக் செய்து கொடுத்து சந்தோஷத்தைப் பகிர்ந்திருக்கிறார். அதை அப்படியே ஒரு பிக்னிக் போல மாற்றி அம்ரித்ஸாரில் பொற்கோயில், ஜாலியன் வாலாபாக் சம்பவ இடம், வாகா எல்லை போன்றவைகளையும் சுற்றிக் காட்டிக் கூட்டி வந்திருக்கிறார்.
முதல் முறை
இதுவரை விமானம் ஏறியதில்லை
இந்த 22 பேரில் பெரும்பாலானவர்கள் ஒஉமுறை கூட விமான நிலையத்துக்குள் வராதவர்கள். இன்று அவர்கள் சொந்தமாக காசு கொடுத்து விமானத்தில் பயணம் செய்கிறார்கள் என்றால் எத்தனை சந்தோஷமாக இருக்கும்.
பாட்டிம்மா
90 வயதுப் பாட்டி
நான் எல்லாம் விமானத்துல பயணம் செய்வேன்னு கனவு கண்டதில்லை. அதெல்லா பெரிய பணக்காரர்களுக்கான சேவைகள் நமக்கு எதுக்குன்னு வேலையை பாத்துக்கிட்டு இருக்குறவங்க நாங்க. இப்பொ எனகு வயது 90. இன்னும் எத்தனை வருஷம் வாழப் போறேன்னு தெரியல. எப்படியோ விகாஸ் புண்ணியத்துல இந்த பிறவிலேயே விமானத்துல பயணம் பண்ணியாச்சு, என்ன கொஞ்சம் பயமா இருந்துச்சு என முன்முறுவல் கொடுக்கிறார் பாட்டி பிம்லா.
நம் தமிழகத்தைச் சேர்ந்தவர்
தமிழகமும் சலைத்ததல்ல
தேவராயன்பாலையம், திருப்பூர் மாவட்டத்திலவிநசி அருகே உள்ள ஒரு கிராமம்.
ரவிக்குமார் என்பவர் அங்கு பின்னலாடை மொத்த வியாபாரியாக தொழில் செய்துவருகிறார். எது எப்படியோ அவருக்கு அவர் கிராமத்தில் உள்ள வயதானவர்களுக்கு ஒரு விமானப் பயணி அனுபவத்தைக் கொடுக்க ஏங்கி தற்போது நடந்தும் விட்டது. தன் தேவராயன்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த 120 பெருக்கு கோவை டூ சென்னை விமானப் பயண சுகத்தைத் தந்துவிட்டார்.
வட நாட்டில் 22 மூத்த குடிமக்களை சந்தோஷப்படுத்தினால், இங்கு நம் தமிழர்கள் 120 பேரை சந்தோஷப்படுத்துகிறார்கள். வாழ்த்துக்கள் விகாஸ், வாழ்த்துக்கள் ரவிக்குமார்.
No comments:
Post a Comment
Please Comment