கடல் கடந்த தமிழன்! ஆராய்ச்சியில் அசத்தும் பொறியாளர் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

கடல் கடந்த தமிழன்! ஆராய்ச்சியில் அசத்தும் பொறியாளர்

ஏதேனும் ஒரு காரணத்தால், பல நாடுகளுக்கு சென்று வரும் வாய்ப்பு கிடைத்தால்... ஜாலியாய் ஊர் சுற்றி, ஷாப்பிங் செய்து, சலிப்பு தட்டும் வரை 'செல்பி' எடுத்து, பெருமிதப்பட்டுக் கொள்வதை தவிர வேறென்ன செய்ய முடியும்.ஆனால், இவர் அப்படி அல்ல. உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைத்த போதிலும், தமிழ் மொழி குறித்த ஆய்வை அசராமல் செய்து வருகிறார். விழுப்புரத்தை பூர்விகமாக கொண்ட குடும்பத்தை சேர்ந்தவர் பாலசுப்ரமணி. 





திருச்சியில் பிறந்து வளர்ந்து, சென்னையில் கல்லுாரி படிப்பு முடித்தவர். கொரிய நாட்டு நிறுவனத்தில், பொறியியல் துறையில் பணியில் சேர்ந்தார். தொழில் ரீதியாக உலகம் சுற்றும் வாய்ப்பு கிடைத்தது. தமிழ் மொழி, பண்பாடு, கலாசாரம் மீது தணியாத காதல் கொண்டிருந்த அவர், கிடைத்த வாய்ப்பில், தமிழ் மொழி குறித்த ஆய்வை மேற்கொள்ள துவங்கினார்.கடந்த, 1989 - 2009 வரை, ஒடிசாவில் பணியாற்றிய போது, பழந்தமிழர் குறித்த பல சான்றுகள் அவருக்கு கிடைத்தன. ஒடிசாவில் அவர் கண்டறிந்த பழங்குடியினர், மன்னர் காலத்து சான்றுகள், பெருமளவு தமிழர் வரலாற்றுடன் ஒப்பிட்டு போவதை உறுதிப்படுத்தினார்.அவர், கூறியதாவது:தமிழ், வாழ்வியல் மொழி. உலகப்பொது மொழியாக ஆங்கிலம் இருந்தாலும், அது, தமிழாக மாறும் காலம், வெகு தொலைவில் இல்லை. வெளிநாட்டு பெண்கள், தற்போது தமிழ் இளைஞர்களை மணம் முடிக்கும் நிலை அதிகரித்து வருகிறது. 





'யாதும் ஊரே; யாவரும் கேளிர்' என்ற வாசகம், தமிழர்களைப் பொறுத்தவரை காலம் கடந்தும் பொருத்தமானதாகவே இருந்து வருகிறது.இத்தகைய நிலை, தமிழர்கள் வாழும், 192 உலக நாடுகளிலும் உள்ளன. இவற்றை ஒன்றிணைத்து, பழமையான தமிழ் மொழியின் சிறப்பை வெளிக்கொணரும் பணி நடந்து வருகிறது.தமிழர்கள், ஆயிரமாயிரம் ஆண்டுக்கு முன்பே வணிகம் செய்து, பல்வேறு நாடுகள் சென்றுள்ளனர்.பல்வேறு பகுதிகளில், அவர்கள் அங்கேயே நிரந்தரமாக தங்கி விட்டனர். 46 ஆயிரம் ஊர்களின் பெயர்கள், தமிழ் பெயர்களாக உள்ளன. சங்க காலத்தமிழர் பயன்படுத்திய பொருட்கள் பல பகுதிகளில் கண்டறியப்பட்டுள்ளன.திருப்பூர், தற்போது தொழில் நகரமாக உள்ளது. கி.பி., 1289லேயே, இங்கு பெரும் வர்த்தகம் நடந்துள்ளதற்கான ஆதாரங்கள், கல்வெட்டுகளாக உள்ளன. தமிழ் மொழி, கலாசாரம், பண்பாடு ஆகியன, நெடுங்காலமாக நிலைத்து நிற்கின்றன.





எங்கள் ஆய்வுகளும், சான்றுகளும், தற்போது துறை ரீதியான கவனத்தை ஈர்த்துள்ளது. எங்கள் ஆய்வுக்கு, அரசு துறைகள் அனுமதியும், உதவியும் வழங்கி வருகின்றன.உலகம் முழுக்க, 192 நாடுகளில் உள்ள தமிழர்களை வரும், 2021க்குள் ஒன்றிணைக்கும் முயற்சி நடந்து வருகிறது. அங்குள்ள தமிழர்கள் குறித்த கல்வெட்டு உள்ளிட்ட வரலாற்று சான்றுகளை வெளிக்கொணர்வதற்கான முயற்சி இது. இதன் மூலம் தமிழ், தமிழர் குறித்து, உலகின் மூலை முடுக்கில் சிதறியுள்ள விவரங்கள் உறுதிபடுத்தப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment