*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*
திருப்பூர், பொம்மநாயக்கன் பாளையம் அரசு பள்ளி மாணவி கவுசல்யா, விடாமுயற்சியால், 'குரூப் - 1' தேர்வில் வெற்றி பெற்று, 'சப்- கலெக்டர்' ஆனார்.திருப்பூரைச் சேர்ந்தவர் கவுசல்யா, 24. பொம்மநாயக்கன் பாளையம், அரசு துவக்கப் பள்ளியில் படித்த இவர், போயம்பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியில், ஆறு முதல் எட்டாம் வகுப்பும், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் 2 வகுப்பும் முடித்தார்.
எல்.ஆர்.ஜி., கல்லுாரியில், பி.எஸ்.சி., விலங்கியல் பட்டம் பெற்ற இவர், 2013ல் நடந்த, 'குரூப்- 4' தேர்வில் வெற்றி பெற்று, தான் படித்த பொம்மநாயக்கன் பாளையம் அரசு உயர்நிலைப் பள்ளியிலேயே, இளநிலை உதவியாளராக, சேர்ந்தார்.அடுத்தடுத்து அரசு தேர்வு எழுதிய அவர், கடந்தாண்டு நடந்த, 'குருப்- 2' தேர்வில் தேர்ச்சி பெற்று, கோவை மாவட்ட, வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலராக, பணியில் சேர்ந்தார்.ஜனவரி முதல், திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில், இளநிலை வேலை வாய்ப்பு அலுவலராக பணிபுரிந்தார்.
இதற்கிடையில், 2017ல், இவர் எழுதிய, 'குரூப் - 1' தேர்வு முடிவு வெளியாகி, பிப்., 19ல், சென்னையில் கவுன்சிலிங் நடந்தது.இதில் தேர்வான கவுசல்யா, சப் - கலெக்டராக, பணி நியமன ஆணை பெற்றார்.கவுசல்யா கூறுகையில், ''அரசு தேர்வுகளின் மீது கொண்ட ஆர்வம், ஈடுபாடு காரணமாகவே, இந்த வெற்றி சாத்தியமானது. பணியாணை பெற்ற தருணத்தை வாழ்வில் மறக்க முடியாது. சப் - கலெக்டர் பயிற்சிக்கு செல்ல ஆர்வத்துடன் உள்ளேன்,'' என்றார்.
No comments:
Post a Comment
Please Comment