பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்: கல்வித்துறை சுற்றறிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்: கல்வித்துறை சுற்றறிக்கை

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்*


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் விடைத்தாளில் அடித்தல், திருத்தல் இருந்தால் தேர்வு முடிவு நிறுத்தப்படும்: கல்வித்துறை சுற்றறிக்கை




தமிழகத்தில் பத்தாவது, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்க இன்னும் சில தினங்களே உள்ளது. இந்நிலையில், பொதுத்தேர்வு எழுதும் அறையில் மாணவர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து முதன்மை கல்வி அலுவலர்களுக்கு கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. 




அதில் கூறியிருப்பதாவது: தேர்வு துவங்கும் முன்பு அறையில் தேர்வுக்குரிய முதன்மை விடைத்தாளின் பக்க எண்ணிக்கையை (பிற்சேர்க்கை) அறிந்து, விடைத்தாள் பக்கங்களின் எண்ணிக்கையை சரிபார்த்துக்கொள்ள வேண்டும். தேர்வர்கள் தமது முகப்பு சீட்டில் உள்ள புகைப்படம், பெயர், பாடம் பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்க்க வேண்டும். 




தங்களது மேஜை மற்றும் நாற்காலிக்கு அடியில் எவ்விதமான துண்டு சீட்டுகளும் இல்லை என்பதை முன்பே உறுதி செய்ய வேண்டும். விடைத்தாளில் எந்த பகுதியிலும் தமது தேர்வு எண்ணை கண்டிப்பாக எழுதக்கூடாது. தேர்வு எழுதும்போது ரப் ஒர்க் செய்வதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். 




கூடுதல் விடைத்தாள் வேண்டுமெனில் கடைசி 2 பக்கங்கள் எழுதும் முன்னரே, கூடுதல் அறை கண்காணிப்பாளரிடம் தெரிவிப்பதன் மூலம் காலவிரயம் தவிர்க்கப்படும். ஓவர் சாய்ஸில் எழுதிய விடைகளை கோடிட்டு அடிக்கும் நிகழ்வுகளில் மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது என்ற குறிப்புரையை பேனாவால் எழுத வேண்டும். அங்கு தேர்வு எண்ணோ, பெயரையோ எழுதக்கூடாது. விடைத்தாளில் எழுதிய அனைத்து விடைகளையோ அல்லது சில விடைகளையோ தேர்வரே அடித்துவிட்டால் ஒழுங்கீனச் செயல் எனக்கருதி தேர்வு முடிவு நிறுத்தப்பட்டு, வரும் இரு பருவங்களுக்கு தேர்வு எழுத அனுமதிக்கப்படமாட்டார்கள்.




 எனவே, தேர்வர்கள் விடைத்தாளில் அடித்தல், திருத்தல் செய்யக் கூடாது. தேர்வர்கள் அனைத்து விடைத்தாள்களிலும் எழுதிய பின்னர் மீதம் உள்ள காலி பக்கங்களை கோடிட வேண்டும். நேரத்தை மட்டும் காட்டக்கூடிய சாதாரண வாட்ச் மட்டுமே அணிந்து வர வேண்டும். தேர்வுக்கு வராதவர்களின் இருக்கையில் சென்று அமராமல், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இருக்கையில்தான் அமர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment