உடுமலை:திருப்பூர் மாவட்டத்தில், குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் இடங்களுக்கு விண்ணப்பிக்க, மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.குழந்தைகளின் பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்ட விதிமுறைகளின்படி, மாவட்டம்தோறும், குழந்தைகள் நலக்குழு திட்டம் செயல்படுகிறது. அனைத்து மாவட்டங்களிலும், குழந்தைகள் நலக்குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.
திருப்பூர் மாவட்டத்திலும், தகுதியுள்ள சமூகப்பணியாளர்கள் விண்ணப்பிக்கலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.குழந்தைகள் தொடர்பான உடல் நலம், கல்வி அல்லது நலப்பணிகளில் ஏழு ஆண்டுகள் முழுமையான ஈடுபாடு கொண்டவர்கள், குழந்தை உளவியல், தவிர, உளவியல் மற்றும் சட்டம், சமூகப்பணி, சமூகவியல் மற்றும் மனித மேம்பாடு உள்ளிட்ட பிரிவுகளில் ஏதேனும் ஒன்றில் பட்டம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்.35 முதல் 65 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியுள்ளவர்கள். ஒரு குழுவில், அதிகப்பட்சமாக இருமுறை மட்டுமே பதவி வகிக்க முடியும். உள்ளிட்ட விதிமுறைகளின் அடிப்படையில் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
திருப்பூர் மாவட்டத்திலுள்ள குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்தில் விண்ணப்பங்கள் பெற்றுக்கொள்ளலாம். தகுதியுள்ளவர்கள், அறிவிப்பு வெளியிடப்பட்ட 15 நாட்களுக்குள் விண்ணப்பங்ளை மாவட்ட நிர்வாகத்திலுள்ள, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment
Please Comment