கோவை:தமிழகம் முழுக்க, மாவட்ட கல்வி அலுவலர் காலிப்பணியிடங்களில், பதவி உயர்வு மூலம், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் நிரந்தரமாக நியமிக்கப்பட்டனர்.கோவை மாவட்டத்தில், நகர் கல்வி மாவட்டம் தவிர, பேரூர், பொள்ளாச்சி, எஸ்.எஸ்.குளம் மற்றும் மாநகராட்சி கல்வி அலுவலர் பணியிடங்கள், காலியாக இருந்தன.
இப்பணியிடங்களில், பள்ளி தலைமையாசிரியர்களுக்கு கூடுதல் பொறுப்பு வழங்கி, பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது. பொதுத்தேர்வு நெருங்கும் நிலையில், காலிப்பணியிடங்களுக்கு நிரந்தர அதிகாரிகளை நியமிக்க வேண்டுமென்ற, கோரிக்கை வலுத்தது. சீனியாரிட்டி அடிப்படையில், பதவி உயர்வு மூலம், காலியிடங்கள் நிரப்பி, நேற்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.கோவை மாவட்டத்தில், பேரூர் கல்வி மாவட்டத்துக்கு, திருநெல்வேலி மாவட்டம், வென்றிலிங்கபுரம், அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ரவீந்திரன் டி.இ.ஓ., வாக நியமிக்கப்பட்டுள்ளார். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்துக்கு, விழுப்புரம் மாவட்டம், சின்னதச்சூர், அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கிருஷ்ணன், மாநகராட்சி பள்ளிகளுக்கான கல்வி அலுவலராக, திருச்சி மாவட்டம், சேனப்பநல்லுார் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ராமசாமி ஆகியோர், டி.இ.ஓ.,க்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், விரைவில் அந்தந்த பதவிகளில், பொறுப்பேற்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.ஒரே காலியிடம் மட்டும்எஸ்.எஸ்.குளம் கல்வி மாவட்டத்துக்கு, சரவணம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளி தலைமையாசிரியர், கீதா பொறுப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இப்பணியிடத்துக்கு மட்டும், நிரந்தர அலுவலர் நியமிக்கப்படவில்லை. மற்ற காலியிடங்களில், அதிகாரிகள் நியமிக்கப்பட்டும், இக்கல்வி மாவட்டம் உருவாக்கப்பட்டதில் இருந்து, நிரந்தர அதிகாரி நியமிக்கப்படாதது ஏன் என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
No comments:
Post a Comment
Please Comment