காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக இணைப்புக்கல்லூரிகளில் 2018 நவம்பரில் நடைபெற்ற அனைத்து முதுகலைப் பாடப்பிரிவுகளுக்கான தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை வெளியிடப்பட்டன.
எம்.ஏ., தமிழ், ஆங்கிலம், வரலாறு, பொருளாதாரம், முதுநிலை சமூகப்பணி, எம்.காம்., எம்.காம் (சி.ஏ)., எம்.பி.ஏ, எம்.எஸ்சி., கணிதம், இயற்பியல், தாவரவியல், விலங்கியல், வேதியியல், உயிர் வேதியியல், மனை அறிவியல், மண்ணியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், தகவல் தொழில்நுட்பம், மின்னணுவியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் முதலில் விடைத்தாள் நகல்
பெறவேண்டும். தேர்வு முடிவு வெளியான 15 நாள்களுக்குள் (02.03.2019-க்கு ள்) விடைத்தாள் நகல் ஒன்றுக்கு ரூ. 500யை பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் வரைவோலையாக செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும். மறுதிப்பீட்டிற்கு விடைத்தாள் நகல் பெற்ற நாளிலிருந்து 10 தினங்களுக்குள் மாணவர்கள் தங்களுடைய கல்லூரி முதல்வர் வழியாக பாடம் ஒன்றுக்கு ரூ.500, பதிவாளர், அழகப்பா பல்கலைக்கழகம், காரைக்குடி என்ற பெயரில் செலுத்தி விண்ணப்பிக்கவேண்டும்.
தேர்வு முடிவுகள் மற்றும் மறுமதிப்பீட்டிற்கான வழிமுறைகள் அழகப்பாயுனிவர்சிட்டி.ஏசி.இன் என்ற பல்கலைக்கழகத்தின் இணையதள முகவரியில் வெளியிடப்பட்டுள்ளது என அழகப்பா பல்கலைக்கழக தேர்வாணையர் (பொறுப்பு) கா. உதயசூரியன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment