காலையில் எழுந்ததுமே எதை செய்கிறார்களோ இல்லையோ தவறாது முகநூலில் ஏதாவது ஒரு பதிவை போட்டு விடுவது நம்மில் பலரின் காலை பழக்கமாக மாறி விட்டது. இப்படி மனிதனை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஒரு செயலி தான் முகநூல்.
பல கோடி உலக மக்கள் இந்த செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த செயலியில் நீண்டகாலமாக நாம் எதிர் பார்திருந்த ஒரு வசதியை இந்நிறுவனத்தின் உரிமையாளரான மார்க் தற்போது இணைத்துள்ளதாக அறிவிப்பு வந்துள்ளது. அது என்ன அப்டேட் என்பதை இனி தெரிந்து கொள்ளலாம்.
முகநூலும் நாமும்..! முகநூலில் இருக்க கூடிய மெஸ்சேன்ஜரில் தான் இந்த அப்டேட் வந்துள்ளது. அதாவது வாட்சப்பை போலவே இந்த செயலியிலும், இனி தவறாக நாம் அனுப்பிய மெசேஜ்களை அழிக்க இயலும். இதிலும் சில நிபந்தனைகள் உள்ளது.
எவ்வளவு நிமிடம்?
இந்த மெசேஜ்களை உங்களால் 10 நிமிடத்திற்குள் மட்டுமே அழிக்க இயலும். மேலும்,
வாட்சப்பை போல இதில் "மெசேஜ் அழிக்கப்பட்டத்தை காட்டி கொடுக்காது. ஆதலால், "delete for everyone" என்கிற ஆப்ஷனை பயன்படுத்தி மெசேஜ்களை அழிக்க இயலும். எனவே, இதை தாராளமாக நாம் நல்ல முறையில் பயன்படுத்தலாம்.
காரணம்?
இந்த அப்டேட்டை வழங்குவதற்கு சில காரணங்கள் உள்ளது என முகநூலின் தலைமை அதிகாரி மற்றும் நிறுவனரான மார்க் சூகர்பெர்க் தெரிவித்துள்ளார். அதாவது, சில தவறான மெசேஜ்களை அழிக்க முடியாத வசதி முகநூலில் இல்லாததால் இதன் வாடிக்கையாளர்கள் சிலபல சங்கடங்களை சந்தித்து வருகின்றனர். இதை தீர்க்கவே இந்த அப்டேட் என இவர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment
Please Comment