சமூக ஊடங்கங்களின் வளர்ச்சி விஸ்வரூபம் எடுத்துள்ளது. இதை இனி யாராலும் தடுக்க முடியாது என்கிற நிலைக்கு நாம் வந்து விட்டோம். நேற்று ஒரு செயலியில் புது அப்டேட் விட்டார்கள் என்றால், அதை விட படு ஜோரான அப்டேட்டை இன்னொரு செயலியில் விடுகின்றனர்.
இது குறிப்பாக சமூக ஊடங்கங்கள் சார்ந்த செயலிகளில் அதிக அளவில் உள்ளது. அந்த வகையில் தற்போது வாட்சப்பில் இதே போன்ற ஒரு அப்டேட் வந்துள்ளது. இது பலருக்கும் ஆச்சரியமூட்டும் வகையில் உள்ளது என அந்நிறுவனம் கூறியுள்ளது. இந்த புதிய அப்டேட் என்ன என்பதை இனி அறிந்து கொள்ளலாம்.
பாதுகாப்பு
தற்போதுள்ள செயலிகளில் பாதுகாப்பு தன்மை மிகவும் குறைந்துள்ளது. இதனால் பயனாளிகள் அதிருப்தியில் உள்ளனர். இதை ஈடுகட்ட வாட்சப் புதிய முயற்சி எடுத்துள்ளது. அதாவது ஸ்மார்ட் போன்களில் லாக் போடுவது போல வாட்சப் செயலியிலும் இனி நம்மால் ஸ்கிரீன் லாக் என்கிற புதிய வசதியை பயன்படுத்த இயலும்.
காரணம்?
வாட்சப்பின் பயனாளிகள் தங்களது அந்தரங்க தகவல்களை பாதுகாக்கவே இந்த வசதி கொண்டுவர பட்டுள்ளது. இது ஸ்கிரீன் லாக் அமைப்பில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் லாக் செய்திருந்தாலும் வருகின்ற போன் கால்ஸ்களை லாக் எடுக்காமலே பேச இயலும். அதே வகையில் மெசேஜ்களும் அனுப்ப இயலும்.
ஐபோன்களுக்கு மட்டுமே!
தற்போது இந்த வசதி ஐபோன்களுக்கு மட்டுமே வந்துள்ளது. இதன்பின் ஆண்டிராய்ட் மொபைல்களுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் ஐபோன் பயனாளிகள் இந்த வசதியை பெற செட்டிங்ஸில் கைரேகை மற்றும் முகம் போன்றவற்றை லாக் செய்வதற்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். இந்த வசதி பீட்டா வெர்ஷனில் இனி கிடைக்கும் என வாட்சப் நிறுவனம் கூறியுள்ளது.
🎻Dear Teachers and New Admins Please add this 9344118029 number to your group🔸
No comments:
Post a Comment
Please Comment