புதுமைப் பள்ளிக்கான விருதுகள் வழங்க தேர்வுக் குழு அமைத்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
அரசுப் பள்ளிகள், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்தல், கற்றல் திறனை மேம்படுத்துதல், புதுமையான கற்பித்தல் முறைகளை பின்பற்றுதல், அனைத்து அடிப்படை வசதிகளும் நிறைவு செய்தல், பள்ளி மேலாண்மைக் குழுவுடன் இணைந்து கல்வி வளர்ச்சிக்கு சிறப்பாக செயல்படும் பள்ளிகளை கண்டறிந்து 'புதுமைப் பள்ளி' என்ற விருது வழங்கப்படும் என்று அரசு கடந்த ஆண்டு அறிவித்தது.
இதன்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தொடக்கப் பள்ளி, நடுநிலைப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேனிலைப் பள்ளி தலா ஒன்று வீதம் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படுகிறது. தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.1 லட்சம், சான்றிதழ்கள், உயர்நிலை, மேனிலைப் பள்ளிகளுக்கு தலா ரூ.2 லட்்சம், சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.
இந்த விருது வழங்க மாநில தேர்வுக் குழு, மாவட்ட அளவில் ஒரு தேர்வுக்குழுவும் அமைத்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவினர் அந்தந்த மாவட்டத்தில் உள்ள சிறந்த புதுமைப் பள்ளிகளை தேர்வு செய்ய வேண்டும்.
இதன்படி, தொடக்கப் பள்ளிகள் 32, நடுநிலைப் பள்ளிகள் 32, உயர்நிலைப் பள்ளிகள் 32, மேனிலைப் பள்ளிகள் 32 என 128 தேர்வு செய்யப்பட வேண்டும். இவற்றுக்காக மொத்தம் 192 லட்சம் வழங்கப்பட உள்ளது. இதையடுத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் பள்ளிகளை தேர்வு செய்து பட்டியல் அனுப்ப வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment
Please Comment