நாடு முழுவதும் மருத்துவப் பட்டய மேற்படிப்புகள், பட்டமேற்படிப்பு களாக மாற்றப்படுகின்றன. 2019-20ம் கல்வி ஆண்டு முதல் இந்த மாற்றத்தை அமல்படுத்த இந்திய மருத்துவக் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.
நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் எம்டி, எம்எஸ் பட்டமேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு (டிப்ளமோ) 26,000-க்கும் மேற் பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத் தில் மட்டும் சுமார் 2,500 இடங்கள் இருக்கின்றன. இதில் பட்டய மேற்படிப்புகளுக்கு மட்டும் நாடு முழுவதும் 2,000-க்கும் அதிகமான இடங்கள் இருக்கின்றன.
டாக்டர்களுக்குள் ஏற்றத்தாழ்வு
எம்பிபிஎஸ் படித்து முடித்தவர் கள் எம்டி, எம்எஸ் போன்ற மூன்று ஆண்டு பட்டமேற்படிப்புகள் மற்றும் இரண்டு ஆண்டு பட்டய மேற் படிப்பில் சேர்த்து படிக்கின்றனர். மூன்றாண்டு படித்த டாக்டர்கள் நகர்புறங்களிலும்,
இரண்டு ஆண்டு படித்த டாக்டர்கள் கிராமப்புறங் களிலும் பணியாற்றுகின்றனர். இதனால், டாக்டர்களுக்குள் ஏற்றத் தாழ்வு நிலவி வருகிறது.
இதனால், பட்டய மேற்படிப்பு படித்த டாக்டர்கள் மீண்டும் மூன்றாண்டு படிப்பில் சேர்த்து படிக்கின்றனர்.
இந்நிலையில் நாடுமுழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்டி மற் றும் எம்எஸ் பட்டய மேற்படிப்பு களை பட்டமேற்படிப்புகளாக மாற்ற இந்திய மருத்துவக் கவுன்சில் முடிவு செய்தது.
393 இடங்கள்
அதன்படி பட்டய மேற்படிப்பு இடங்களின் விவரங்களைக் கேட்டு மாநில அரசுகளுக்கு இந்திய மருத்துவக் கவுன்சில் கடிதம் அனுப்பியது.
தமிழகத்தில் அரசு மருத்துவக் கல்லூரிகளில் 393 இடங்கள் இருப்பதாக தமிழக சுகாதாரத் துறைச் செயலாளர் ஜெ.ராதாகிருஷ்ணன் கடிதம் அனுப்பினார்.
தனியார் மருத்துவக் கல்லூரி களின் இடங்கள் குறித்து தமிழ் நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம் தெரிவித்து உள்ளது.
இதேபோல், மற்ற மாநில அரசு களும் தங்கள் மாநிலத்தில் உள்ள இடங்கள் குறித்த விவரங்களை அனுப்பியுள்ளனர். வரும் 2019-20-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை யில் இந்த புதிய முறையை இந்திய மருத்துவக் கவுன்சில் அமல்படுத்த உள்ளது.
மருத்துவக் கல்வியில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக இருந்த பட்டய மேற்படிப்பு நீக்கப் பட உள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசு சாரா சேவை மருத்துவர் கள் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கார்த்திகேயன் கூறும்போது, "மருத் துவ பட்டய மேற்படிப்பு, பட்டமேற் படிப்புகளாக மாற்றப்படுவது வரவேற்கத்தக்கது. இதனால்,
பட்டமேற்படிப்புகளுக்கான இடங் கள் அதிகரிக்கும். டாக்டர்களுக்குள் ஏற்றத்தாழ்வு இருக்காது.
அரசு மருத்துவர்கள் கோரிக்கை
எம்பிபிஎஸ் படித்த டாக்டர்கள் அதிக அளவில் எம்டி, எம்எஸ் படிக்க முடியும். அரசு டாக்டர்களுக்கு பட்டமேற்படிப்பில் இடஒதுக்கீடு இல்லை. பட்டய மேற்படிப்பில் மட்டும் 50 சதவீத இடஒதுக்கீடு இருந்தது. தற்போது இரண்டு ஆண்டு படிப்பு மூன்றாண்டு கொண்டதாக மாற்றப்படு வதால், மூன்றாண்டு படிப்பு களில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்குமாறு அரசு டாக்டர்கள் கேட்கின்றனர்.
இது மருத்துவக் கவுன்சில் மற் றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது. மருத்துவ பட்ட மேற்படிப்புகளில் இடஒதுக் கீடு கொடுத்தால் மருத்துவத் தின் தரம் குறைந்துவிடும்" என்றார்.
கிராம மக்களுக்கு சிகிச்சை
இதுதொடர்பாக தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கத்தின் செயலாளர் டாக்டர் கதிர்வேல் கூறும்போது,
"மருத்துவப் பட்ட மேற்படிப்புகளில் அரசு டாக்டர் களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு இல்லை. இரண்டு ஆண்டு படிப்பில் மட்டும் அரசு டாக்டர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு உள்ளது. மூன்றாண்டு படிக்கும் அரசு டாக்டர்கள் நகர்புறங்களிலும், இரண்டு ஆண்டு படிக்கும் அரசு டாக்டர்கள் கிராமப்புறங்களிலும் பணியாற்றி வருகின்றனர்.
இந்தப் புதிய முறையால் பட்டமேற்படிப்புகளின் இடங்கள் அதிகமாகும். ஆனால், அரசு டாக்டர்களுக்கு இடஒதுக் கீடு இல்லாததால், கிராமப் புறங்களில் பணியாற்றும் அரசு டாக்டர்களின் எண்ணிக்கை குறையும். கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் சிகிச்சை பெற முடியாத சூழ்நிலை ஏற்படும்" என்றார்.
No comments:
Post a Comment
Please Comment