WhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

WhatsApp : வாட்ஸ் ஆப்பில் புதிய பாதுகாப்பு வசதி அறிமுகம்

ஃபேஸ் ஐடி , டச் ஐடி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களுடன் வாட்ஸ்ஆப் செயலி ஆப்பிள் பயனாளர்களுக்கு வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பினை அதிகரிக்கும் நோக்கில் புதிய அம்சம் பயோமெட்ரிக் முறையில் வழங்கப்பட்டுள்ளது. வாட்ஸ்ஆப் செயிலியில் இனைக்கப்பட்டுள்ள புதிய பாதுகாப்பு சார்ந்த அம்சம் மிகப்பெரிய நன்மையை ஆப்பிள் பயனர்களுக்கு வழங்க உள்ளது. 




குறிப்பாக பயனாளர்கள் தங்களது தகவல்களை பாதுகாக்க வழி வகை செய்யப்பட்டிருக்கின்றது. ஆனால் இந்த பாதுகாப்பு முறையை தேவைப்படும் வாடிக்கையாளர்கள் மட்டும் இயக்கிக் கொள்ளலாம். ஆப்பிள் ஐஓஎஸ் மொபைலில் இணைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அம்சம் செயற்படுதினாலும், அறிவிக்கையில் திரும்ப பதில் வழங்கும் அம்சம் தொடர்ந்து செயல்படுத்தப்படுகின்றது. ஆனால் முழுமையான செயலி பயன்பாட்டை அனுக ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி தேவைப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வசதியை இயக்க உங்கள் ஐபோன் 5s அல்லது அதற்கு மேற்பட்ட கருவியாகவும், இயங்குதளம் ஐஓஎஸ் 9 அல்லது அதற்கு மேற்பட்ட தளமாக இருக்க வேண்டியது அவசியமாகும். இதற்கு உங்கள் வாட்ஸ் ஆப் வெர்ஷன் 2.19.20 ஆக இருக்க வேண்டியது அவசியமாகும் 




 இதனை செயற்படுத்த Settings > Account > Privacy > Screen Lock என்ற பகுதிக்கு சென்றால் கீழே உள்ளதை போன்று தோன்றும் முறையை செயற்படுத்தலாம். செயற்படுத்தி பிறகு நீங்கள் வாட்ஸ்ஆப்பில் உள்நுழைந்து வெளியேறிய பின்னர் உடனடியாக மூடிக்கொள்ள அல்லது 1 நிமிடம் அல்லது 15 நிமிடம் அல்லது 1 மணி நேரம் போன்ற தேர்வுகள் நீங்கள் ஃபேஸ் ஐடி அல்லது டச் ஐடி முறையின் நேர அவகாச முறையாகும்.

No comments:

Post a Comment

Please Comment