இயற்கை எரிவாயு நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள்: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம் - ThulirKalvi Blogs

Latest

Search This Site

இயற்கை எரிவாயு நிறுவனங்களில் காலிப் பணியிடங்கள்: முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பு: எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு பொது நிறுவனங்களில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கு முன்னாள் படைவீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் 13 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்நிறுவனத்தில் பணியாற்றிட விருப்பம் உள்ள தகுதியான முன்னாள் படைவீரர்கள் ‌w‌w‌w.‌o‌n‌g​c‌i‌n‌d‌i​a.​c‌o‌m என்ற இணையதளம் முலம் வரும் பிப்ரவரி 20 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். திருப்பூர் மாவட்டத்தைச் சார்ந்த தகுதியும், விருப்பமும் உள்ள முன்னாள் படைவீரர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment