அடிக்கடி பயன்படுத்தும் இந்த O.K. என்கிற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா? - ThulirKalvi Blogs

Latest

Search This Site

அடிக்கடி பயன்படுத்தும் இந்த O.K. என்கிற சொல்லுக்கு உண்மையான அர்த்தம் என்னனு தெரியுமா?

இப்போது நாம் பேசுவது தூய தமிழும் இல்லை. தூய ஆங்கிலமும் இல்லை. எல்லா மொழிகளையும் ஏதோ ஒரு விதத்தில் நாம் கொலை செய்து கொண்டுதான் இருக்கின்றோம். மொழிகள் பல இருந்தாலும் அவற்றில் ஒரு மொழியை கூட நாம் தெளிவாகவும், சரியாகவும் பேசுவதில்லை. ஏனோ இது நமக்கு பழகிவிட்டது. தமிழில் ஆங்கிலத்தை பெரும்பாலும் நாம் கலந்து பேசும் பழக்கம் கொண்டுள்ளோம். தமிழ் பேசும் போது ஆங்கில வார்த்தையான O.K. என்பதை அதிக அளவில் நாம் பயன்படுத்தும். 

உண்மையில் இந்த வார்த்தைக்கு என்ன அர்த்தம் என்று தெரியுமா? இதற்கு பின்னால் இருக்கும் வரலாறு என்ன? இது போன்ற பல சுவாரசிய தகவல்களை அறிந்து கொள்வோம். O.K. எந்த ஒரு விஷயம் செய்தாலும் அதை "சரி" என்கிற பாணியில் சொல்வதே O.K. என்கிற அர்த்தமாக நாம் வைத்துள்ளோம். ஆனால் இந்த வார்த்தைக்கென்று ஒரு தனித்துவமான வரலாறே உள்ளது. இந்த வார்த்தையின் உண்மையான ஆங்கில வடிவம் என்னவென்றால் "All Correct" என்பது தான். 

 சுருக்கம் நாம் எப்படி தமிழில் சில வார்த்தைகளை சுருக்கி சுருக்கி பயன்படுத்துகிறமோ அதே போன்று தான் ஆங்கிலத்தில் இதை சுருக்கமாக அதன் ஒலியை வைத்து அழைத்துள்ளனர். அதாவது "ஆள்-All" என்கிற வார்த்தையின் முதல் எழுத்தின் ஒலியில் இருந்து "O"- வைஎடுத்து கொண்டனர். அதே போன்று இரண்டாம் வார்த்தையின் ஒலியில் இருந்து "K"- வை எடுத்து கொண்டனர். 

 முதல் பயன்பாடு முதல் முதலில் வெளிநாட்டின் பிரபல பத்திரிகையான Boston Morning Post என்கிற இதழில் தான் O.K. என்கிற வார்த்தையை மார்ச் 23,1839 ஆம் ஆண்டு பயன்படுத்தினர். அதன்பின், தொடர்ச்சியாக எல்லா பத்திரிகைகளிலும் இது பிரபலமாக பரவியது. இப்படித்தான் இந்த வார்த்தை உலகெங்கும் இன்று பயன்படுத்தப்பட்டு வருகிறது. இனி எல்லாம் O.K. தானே மக்களே!

No comments:

Post a Comment

Please Comment