Budget முழு விவரம் 2019 - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Budget முழு விவரம் 2019

Budget முழு விவரம் 2019 புதுடெல்லி  வரி விதிப்புக்குரிய வருமானம் ரூ.5 லட்சமாக இருந்தால் முழு வரிவிலக்கு.  ஆண்டு வருமானம் ரூ.6.5 லட்சம் வரை உள்ளவர்கள், வைப்பு நிதி, பரிந்துரைக்கப்பட்ட பங்குகளில் ரூ.1.5 லட்சம் வரை முதலீடு செய்தால் வரி செலுத்த வேண்டியதில்லை. 








  வருமான வரி கணக்கு தாக்கல் 24 மணி நேரத்தில் பரிசீலிக்கப்படும். 

  சுமார் 12 கோடி குறு, சிறு விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ.6,000 நிதியுதவி. 


  விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும். 

  இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு பயிர்க்கடனில் 2% வட்டி தள்ளுபடி 


  பயிர்க்கடனை முறையாக செலுத்தும் விவசாயிகளுக்கு 3% வட்டி தள்ளுபடி. 



  பசுக்களின் நலனுக்காக ரூ.750 கோடி ஒதுக்கீடு.Budget முழு விவரம் 2019  

  தேசிய பசு ஆணையம் (ராஷ்டிரிய காமதேனு ஆயோக்) அமைப்பு.

  மீன் வள மேம்பாட்டுக்காக தனி அமைச்சகம். 

  அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு ரூ.3,000 ஓய்வூதியம். 

  நிரந்தர கழிவுத் தொகை ரூ.40,000-ல் இருந்து ரூ.50,000 ஆக உயர்வு 

  வங்கி, அஞ்சலக முதலீடுகள் மூலம் கிடைக்கும் ரூ.50,000 வரையிலான வட்டிக்கு வரிபிடித்தம் செய்யப்படாது. 

  வீட்டு வாடகை வருமான வரி விலக்கு உச்ச வரம்பு ரூ.1.8 லட்சத்திலிருந்து ரூ.2.4 லட்சமாக உயர்வு 

  பணிக்கொடை உச்ச வரம்பு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்வு 

  இரண்டாவது வீடு வாங்குவோருக்கும் வரிச் சலுகை. 

  ஜிஎஸ்டி வரி வருவாய் 2019 ஜனவரியில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டியது.  

 ஐந்து கோடிக்கு குறைவாக வருவாய் ஈட்டும் வியாபாரிகள் 4 மாதங்களுக்கு ஒருமுறை ஜிஎஸ்டி ரிட்டர்ன் தாக்கல் செய்யலாம். இதன்மூலம் 90 சதவீத வியாபாரிகள் பயன் அடைவர்.

  ஜிஎஸ்டி வரிகுறைப்பால் பொதுமக்களுக்கு ரூ.80,000 கோடி வரை பயன். 

  நூறு நாள் வேலை திட்டத்துக்கு ரூ.60,000 கோடி ஒதுக்கீடு.  கிராமப்புற சாலை பணிக்காக ரூ.19,000 கோடி ஒதுக்கீடு. 

  நாடோடி மக்களின் மேம்பாட்டுக்காக நலவாரியம். 

  மகப்பேறு விடுப்பு 26 வாரங்களாக அதிகரிப்பு.  ராணுவத்துக்கு ரூ.3.05 லட்சம் கோடி நிதி ஒதுக்கீடு. 

  ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் திட்டத்துக்காக ரூ.35,000 கோடி. 

  அடுத்த 5 ஆண்டுகளில் ஒரு லட்சம் கிராமங்கள் டிஜிட்டல்மயமாக்கப்படும்.  ரூ.1.30 லட்சம் கோடி கருப்பு பணம் மீட்பு. 

  3.38 லட்சம் போலி நிறுவனங்கள் ஒழிப்பு. 

  மருத்துவ காப்பீடு திட்டத்தில் 50 கோடி பேர் இணைப்பு. 

  கடந்த நான்கரை ஆண்டுகளில் 14 புதிய எய்ம்ஸ் மருத்துவமனைகள். 

  செயற்கை நுண்ணறிவுக்காக தேசிய மையம். 

  விமான நிலையங்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது.

  நாள்தோறும் 27 கி.மீ. தொலைவுக்கு புதிய சாலை. 

  கல்விக்காக ரூ.93,847.64 கோடி ஒதுக்கீடு. 

  ரயில்வே துறைக்கு ரூ.64,587 கோடி ஒதுக்கீடு. 

  அகல பாதை ரயில் தடங்களில் ஆளில்லா கிராசிங்குகள் அகற்றம். 

  உலக தரத்தில் 'வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்' ரயில் அறிமுகம். 

  பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக் காக 10% இடஒதுக்கீடு அமல். 

  மிகப் பெரும் பொருளாதார நாடுகளில் 6-வது இடத்துக்கு இந்தியா முன்னேற்றம். 

 சவுபாக்யா யோஜ்னா திட்டத்தில் இலவச மின் விநியோகம். 

  நாடு முழுவதும் 143 கோடி எல்இடி விளக்குகள் விநியோகம்.

  முன்னோடி மாவட்ட திட்டத்துக்கு 115 மாவட்டங்கள் தேர்வு 

  பிரதம மந்திரி ஆவாஸ் யோஜ்னா திட்டத்தில் 1.53 கோடி வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.

  6 கோடி பேருக்கு இலவச சமையல் காஸ் இணைப்பு. 

  34 கோடி பேருக்கு ஜன் தன் வங்கி கணக்குகள் தொடக்கம். 

  முத்ரா யோஜ்னா திட்டத்தில் ரூ.7.23 லட்சம் கோடி கடன். 

  ஆதார் திட்டம் வெற்றிகரமாக அமல். 


  98 சதவீத கிராமங்களில் கழிப்பறை வசதி. 


  மொபைல் போன் தயாரிப்பு நிறுவனங்களின் எண்ணிக்கை 2-ல் இருந்து 268 ஆக உயர்வு. 

  சினிமா படப்படிப்புகளுக்கு ஒற்றை சாளர அடிப்படையில் அனுமதி. 

  வரும் 2022-ம் ஆண்டில் விண்வெளிக்கு இந்திய வீரர் அனுப்பப்படுவார்.  அடுத்த 5 ஆண்டுகளில் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார நாடாக இந்தியா மாறும். 


  வரும் 2022-ல் புதிய இந்தியா உதயமாகும். 



🌐🙏Dear Admins🙋‍♂🙋‍♀ Do you want to get 🌱ThulirKalvi🔰Updates🖥 on Your 🤳WhatsApp Group, Please🙏 Add this Number📌9⃣3⃣4⃣4⃣1⃣1⃣8⃣0⃣2⃣9⃣📌🍂

No comments:

Post a Comment

Please Comment