பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம், தேர்வு கட்டணம் Exam Fees வசூலிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு Department of examination தேர்வு துறை அறிவுரை பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம், தேர்வு கட்டணம் வசூலிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை அறிவுறுத்தியுள்ளது.
இதையும் படிக்கவும்
கம்ப்யூட்டர் சயின்ஸ்' computer scienceஆசிரியர் கல்வி தகுதியை மாற்றியது அரசு
கால்நடை உதவியாளர் பணிக்கு நேர்காணல்: 22இல் தொடக்கம்
மருத்துவத்துறையில் 'அவுட் சோர்சிங்' முறை; கைவிட ஊழியர்கள் வலியுறுத்தல்
குழந்தைகளுக்கு பயன்படுத்தும் பற்பசை விஷயத்தில் கவனம் தேவை..!!
பொது தேர்வு எழுதும் மாணவர்களிடம், தேர்வு கட்டணம் Exam Fees வசூலிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு தேர்வு துறை அறிவுரை
பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, பொது தேர்வுகள் நடத்தப்படுகின்றன Public Exam
🔰.இதில், தமிழ் வழியில், அரசு பள்ளிகளில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும், தேர்வு கட்டணம் செலுத்துவதில், விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
🔰அரசு பள்ளிகளில், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களில், முன்னேறிய பிரிவினர் மட்டும், தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். தனியார் மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் படிக்கும், அனைத்து மாணவர்களும் தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும்.
🔰இந்த வகையில், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 மாணவர்களில், செய்முறை தேர்வு உள்ள பாட பிரிவை சேர்ந்தோர், மதிப்பெண் கட்டணம், 20 ரூபாய், சேவை கட்டணம், ஐந்து ரூபாய் மற்றும் தேர்வு கட்டணம், 200 ரூபாய் என, 225 ரூபாய் செலுத்த வேண்டும்.
🔰செய்முறை பாடப்பிரிவு அல்லாதோர், 175 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். பத்தாம் வகுப்பு மாணவர்கள், 115 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்த வேண்டும்.
🔰இந்த கட்டணத்தை, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களும், கட்டாயம் வசூலித்து, 28ம் தேதிக்குள், தேர்வு துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும் என, அரசு தேர்வு துறை கெடு விதித்துஉள்ளது.
No comments:
Post a Comment
Please Comment