Redmi Note 7 : ரெட்மி நோட் 7 அறிமுக தேதி விபரம் வெளியானது - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Redmi Note 7 : ரெட்மி நோட் 7 அறிமுக தேதி விபரம் வெளியானது

பிப்ரவரி 28, 2019-ல் இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில், புதிய ரெட்மி நோட் 7 மொபைல் போனை வெளியிட உள்ளத்தை சியோமி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது. 48 எம்பி கேமராவை பெற்றதாக ரெட்மி நோட் 7 விற்பனைக்கு வரவுள்ளது. கடந்த மாதம் முன்னதாக சீனாவில் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 7 மொபைல் போன் அமோக ஆதரவை பெற்று விற்பனைக்கு வந்த ஒரே மாதத்தில் 10 லட்சம் விற்பனை இலக்கை கடந்துள்ள நிலையில் இந்தியாவில் ரெட்மி நோட் 7 வெளியிடப்பட உள்ளது. ரெட்மி நோட் 7 மொபைல் போன் 6.3 அங்குல முழு ஹெச்டி பிளஸ் காட்சி திரையை பெற்ற 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பை பெற்று இதன் ஆஸ்பெக்ட் விகிதம்19.5:9 மற்றும் 1080 பிக்சல்ஸ் தீர்மானத்தை கொண்டுள்ளது. நோட் 7 மொபைல் போன் மாடல் நீலம், கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், 

ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்குப்படுகின்ற நோட் 7 மொபைல் போன் மாடலில் 3GB+32GB, 4GB+64GB மற்றும் 6GB+64GB என கிடைக்கின்றது. மேலும் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 256GB வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை இனைக்கலாம். பின்புறத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் இயங்கும் இரண்டு கேமராவை பெற்று 48 மெகாபிக்சல் சென்சார் மற்றும் 5 மெகாபிக்சல் டெப்த் சென்சார் என அமைந்துள்ளது. 

முன்புறத்தில் செல்பீ படங்களுக்கு மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவாக சார்ஜிங் செய்யும் வகையில் குவால்காம் க்விக் சார்ஜ் 4.0. உடன் கூடிய 4000mAh பேட்டரி, USB Type-C போர்ட், டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 5.0, GPS, GLONASS மற்றும் USB Type-C port ஆகியவற்றை கொண்டிருக்கும்.

 சீனாவில் வெளியிடப்பட்ட மாடலின் அடிப்படையில் இந்தியாவில் ரெட்மி நோட் 7 3GB+32GB - 999 Yuan (ரூ. 10,200), அடுத்து 4GB+64GB - 1199 Yuan (ரூ. 12,200) மற்றும் 6GB+64GB - 1399 Yuan ( ரூ. 14, 250) அமைந்திருக்கலாம்

No comments:

Post a Comment

Please Comment