நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது. தமிழகத்தில் கடந்த 1ம் தேதி தொடங்கிய பிளஸ்2 அரசு பொதுத்தேர்வு, 20ம் தேதி முடிவடைந்தது. நடப்பாண்டு விடைத்தாள் திருத்தும் பணி முன்கூட்டியே துவங்குகிறது.
அதன்படி, நாமக்கல் மாவட்டத்தில் பிளஸ்2 விடைத்தாள் திருத்த நாமக்கல், திருச்செங்கோடு ஆகிய ஊர்களில் இரண்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையங்களில் நாளை (29ம்தேதி) முதல் விடைத்தாள்கள் திருத்தப்படுகிறது. விடைத்தாள் திருத்தும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முதுகலை ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள். நாளை(29ம் தேதி) மூத்த முதுகலை ஆசிரியர்களும், சனிக்கிழமை முதல் மற்ற ஆசிரியர்களும் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடுகின்றனர்.
இரண்டு மையங்களிலும், ஒவ்வொரு பாடத்திலும் சுமார் 25 ஆயிரம் விடைத்தாள் மதிப்பீடு செய்யப்படுகிறது. இந்த ஆண்டு, பிளஸ் 2 அரசு பொது தேர்வில் ஆங்கிலம், கணிதம், இயற்பியல் உயிரியல் ஆகிய பாடங்களில் கேள்வித்தாள் மிகவும் கடினமாக இருந்ததாக மாணவ, மாணவியர் தெரிவித்தனர். எந்த பாடத்திலாவது கருணை மதிப்பெண் அளிக்கப்படுமா? என்பது தேர்வுத்துறை அளிக்கும் கீ ஆன்சரில் தான் தெரிய வரும் என முதுகலை ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
Please Comment