அனைவருக்கும் ரூ.2000 உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனஅமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
ஈரோடு, கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், "தனியார் பள்ளிகளின் கட்டிடங்கள், உள் கட்டமைப்பு, மாணவர்கள் எண்ணிக்கை உள்ளிட்ட அனைத்தையும் ஆய்வு செய்ய அரசுக்கு அதிகாரம் உண்டு என தெரிவித்தார்.
அரசு பள்ளிகளில் தற்போது ஆங்கில வழிக் கல்வி கற்பிப்பதால் மாணவர்களை அரசு பள்ளிகளில் தான் சேர்ப்பார்கள் என கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர்,ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய முதலமைச்சர் தான் முடிவெடுக்க வேண்டும் என்றும், யாரும் விடுபடாமல்அனைவருக்கும் 2000 ரூபாய் உதவித் தொகை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment
Please Comment