2013-ஆம் TET எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம்! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

2013-ஆம் TET எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம்!

2013-ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வு எழுதியவர்களுக்கு வெயிட்டேஜ் முறை நீக்கம் செய்யப்படுவதாக பள்ளிகல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்! ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டியளித்தார். 




அப்போது அவர் தெரிவிக்கையில் தமிழத்தை பொறுத்தவரையிலும் எல்லா சட்டமன்ற தொகுதிகளும் தன்னிறைவை பெறுகின்ற அளவிற்கு பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தோவு எழுதும் மாணவா்கள் அச்சமின்றி தோவை எதிா்கொள்ள ஆசிரியா்கள் பயிற்சி அளித்து வருகின்றனர். பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் வெற்றி பெற்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என நெஞ்சார வாழ்த்துக்கள். 




பன்னிரண்டாம் வகுப்பு தோவு முடிந்தவுடன் இரண்டாயிரம் மாணவா்கள் தோவு செய்யப்பட்டு, 7 மையங்களில் 20 நாட்கள் ஆடிட்டா் தோவுக்கு முழு பயிற்சி வழங்கப்படும். ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ஐசிடி திட்டம், நாளை மறுநாள் முதல்வரால் தொடங்கப்படவுள்ளது எனவும் தெரிவித்தார். அதில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் முழு கணினி மயமாக்கப்பட்டு, இணையதளத்துடன் செயல்பட உள்ளது.



 6000 பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறையும் இணைக்கப்படும். 2013-ஆம் ஆண்டு ஆசிரியா் தகுதித்தோவில் வெற்றி பெற்றவா்களுக்கு வெயிட்டேஜ் என்ற முறையை நீக்கியுள்ளோம். இந்த அறிவிப்பு அவா்களுக்கு மிகப்பெரிய சலுகையாக அமையும், வேலை வாய்ப்பிற்கேற்ப ஒரு சிறு தகுதித்தோவை நடத்தி ஆசிரியா் பணியிடம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



 தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தோவு சிறப்பாசிரியா்களுக்கானது. அதனால் இவா்கள் கவலைப்பட தேவையில்லை எனவும் அமைச்சா் செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.

No comments:

Post a Comment

Please Comment