LIC நிறுவனத்தின் பல்வேறு பிரிவுகளில் துணை நிர்வாக அதிகாரி (Assistant Administrative Officer / AAO) பணியிடங்களை நிரப்ப தேர்வு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது!
அறிவிக்கப்பட்ட பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் licindia.in என்ற LIC நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணியிடங்கள் விவரம்....
மொத்த காலி பணி இடங்கள் 590
தேர்வு தொடர்பான முக்கிய தேதிகள்...
விண்ணப்பப் பதிவு தொடங்கும் நாள் மார்ச் 2, 2019
விண்ணப்பப் பதிவுக்கு கடைசி நாள் மார்ச் 23, 2019
முதல்நிலை தேர்வுக்கு கால் லெட்டர் பதிவிறக்கம் செய்ய அவகாசம் ஏப்ரல் 22-30, 2019
ஆன்லைனில் முதல்நிலை தேர்வுக்கான உத்தேச தேதி மே 4-5, 2019
ஆன்லைனில் முக்கியத் தேர்வுக்கான உத்தேச தேதி ஜூன் 28, 2019
வயது வரம்பு: குறைந்தபட்ச வயது: 21 ஆண்டுகள்; அதிகபட்ச வயது: 30 ஆண்டுகள்.
விண்ணப்பக் கட்டணம் ரூ.600
கட்டணம் செலுத்தம் வழிகள்: ஆன்லைனில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இன்டர்நெட் பேங்கிங், IMPS, கேஷ் கார்டுகள் / மொபைல் வாலெட் ஆகியவை மூலம் கட்டணம் செலுத்தலாம்.
தேர்வு நடைபெறும் முறை: மூன்று கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்படுகின்றன.
முதல் நிலைத் தேர்வு (Prelims)
முக்கிய தேர்வு அல்லது மெயின் தேர்வு (Mains)
நேர்முகத் தேர்வு (Interview)
No comments:
Post a Comment
Please Comment