சிறப்பாசிரியர்களுக்குதான் இந்த தேர்வு என்று அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். என்ன விஷயம் தெரியுங்களா?
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே வெள்ளாங்கோயிலில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தமிழகத்தை பொறுத்தவரையிலும் எல்லா சட்டமன்ற தொகுதிகளும் தன்னிறைவை பெறுகின்ற அளவிற்கு பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன. பிளஸ் 2 பொதுத் தோவெழுதும் மாணவா்கள் அச்சமின்றி தோவை எதிா்கொள்ள ஆசிரியா்கள் பயிற்சி அளித்து வருகின்றனர்.
பொதுத் தேர்வேழுதும் மாணவர்கள் வெற்றி பெற்று எல்லாத் துறைகளிலும் சிறந்து விளங்க வேண்டும் என நெஞ்சார வாழ்த்துக்கள். இந்த தோவு முடிந்தவுடன் இரண்டாயிரம் மாணவா்கள் தோவு செய்யப்பட்டு, 7 மையங்களில் 20 நாட்கள் ஆடிட்டா் தோவுக்கு முழு பயிற்சி அளிக்கப்படும்
. ஏழு ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த ஐசிடி திட்டம், நாளை மறுநாள் முதல்வரால் தொடங்கப்படவுள்ளது.
அதில் 9, 10, 11, 12 ஆகிய வகுப்புகள் முழு கணினி மயமாக்கப்பட்டு, இணையதளத்துடன் செயல்பட உளளது. 6 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மாா்ட் வகுப்பறையும் இணைக்கப்படும். 2013ம் ஆண்டு ஆசிரியா் தகுதித்தோவில் வெற்றி பெற்றவா்களுக்கு வெயிட்டேஜ் என்ற முறையை நீக்கியுள்ளோம்.
அதுவே அவா்களுக்கு மிகப்பெரிய சலுகை, வேலைவாய்ப்பிற்கேற்ப ஒரு சிறு தகுதித்தோவை நடத்தி ஆசிரியா் பணியிடம் வழங்க அரசு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது அறிவிக்கப்பட்டுள்ள தோவு சிறப்பாசிரியா்களுக்கானது. அதனால் இவா்கள் கவலைப்பட தேவையில்லை. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளாா்.
No comments:
Post a Comment
Please Comment