பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிக்க ஆர்வம் காட்டாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பொதுத் தேர்வுகளில் தேர்ச்சியை அதிகரிக்க ஆர்வம் காட்டாத ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் எச்சரிக்கை

திருவண்ணாமலை மாவட்டத்தில் 10, 11, 12-ஆம் வகுப்பு அரசுப் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி விழுக்காட்டை அதிகரிக்க ஆர்வம் காட்டாத தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் எச்சரித்துள்ளார். 





இதுகுறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் வெ.ஜெயக்குமார் கூறியதாவது: நிகழாண்டு அரசு பொதுத் தேர்வுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவிகளும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், விடுமுறை நாள்களில்கூட சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அந்தந்தப் பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. 





ஆனால், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை. செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி உள்பட சில பள்ளிகளில் சனிக்கிழமை சிறப்பு வகுப்புகள் நடைபெறாதது நேரடி ஆய்வில் தெரியவந்தது. இதே நிலை தொடர்ந்து தேர்வு முடிவுகள் வெளியாகும்போது தேர்ச்சி விழுக்காடு குறைவாக இருந்தால், அதற்குக் காரணமான பள்ளி நிர்வாகம் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை கண்டிப்பாக எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment