7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த அரசாணை சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள் கோரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

7வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த அரசாணை சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள் கோரிக்கை

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்* 



ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத்துவதற்கான அரசாணையை உடனடியாக வெளியிட வேண்டும் என, புதுச்சேரி அரசு சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களின் கூட்டு நடவடிக்கைக் குழு வலியுறுத்தி உள்ளது.




இதுகுறித்து, கூட்டு நடவடிக்கைக் குழுவின் தலைவர் ராம்குமார் கூறியதாவது:



சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை உடனே வழங்க வேண்டி, கடந்த 4 மாதங்களாக பலகட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.



ஜனவரி மாதம் நடந்த காலவரையற்ற பணி புறக்கணிப்பு போராட்டத்தின் விளைவாக, 7வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு அமல்படுத்தும் அதே தேதியில், அனைத்து அரசு சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கும் அமல்படுத்தப்படும் என, முதல்வர், கடந்த ஜனவரி 28ம் தேதியன்று உறுதியளித்தார்.முதல்வர் அளித்த வாக்குறுதியை ஏற்று சொசைட்டி கல்லுாரி ஆசிரியர்களும், ஆசிரியர் அல்லாத ஊழியர்களும் போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்கு திரும்பினர். 



தற்போது, அரசு கல்லுாரி ஆசிரியர்களுக்கு மட்டும் 7வது ஊதியக் குழு பரிந்துரைத்த ஊதியத்தை அமல்படுத்தும் அரசாணையை, கடந்த 26ம் தேதியன்று, உயர்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. இந்த அரசாணை, முதல்வர் அளித்த வாக்குறுதிக்கு முரண்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.




முதல்வர் அளித்த வாக்குறுதிபடி, அனைத்து சொசைட்டி கல்லுாரிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு 7வது ஊதியக் குழு ஊதியத்தை வழங்குவதற்கு, வரும் 3ம் தேதிக்குள், அமைச்சரவை ஒப்புதலோடு அரசாணை வெளியிட வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment

Please Comment