வருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வருமான வரி உபரி தொகை திரும்ப பெற புது நிபந்தனை

*Dear Sir/Madam : நமது 🔰கல்வி தீபம் 🔥6⃣ மற்றும் ☘ThulirKalvi🔰9⃣ குழுவில் யாரேனும் இருந்தால் எண்ணை தொடர்பு கொள்ளும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்* 



வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகையை திரும்ப பெறுவதற்கு, வங்கி கணக்குடன், 'பான்' எண் எனப்படும் வருமான வரி நிரந்தர கணக்கு எண்ணை இணைக்க வேண்டும்' என, வருமான வரித்துறை அறிவுறுத்தி உள்ளது. வருமான வரி செலுத்துவோரிடமிருந்து, சில நேரங்களில், அவர்களுக்கான வரித் தொகையை விட, கூடுதலான தொகை, முன் கூட்டியே பிடித்தம் செய்யப்படுவது வழக்கம். இவ்வாறு கூடுதலாக பிடித்தம் செய்யப்பட்ட தொகை, வாடிக்யைாளர் அளித்த வங்கி கணக்கு விபரங்கள் அடிப்படையில், வங்கி யில் நேரடியாக செலுத்தப்பட்டும், 



காசோலை யாகவும் இதுவரை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், வருமான வரித்துறை வெளியிட்ட அறிவிப்பு: இன்று முதல், வருமான வரி பிடித்தம் போக, மீதமுள்ள தொகை, 'இ - சேவை' முறையில், நேரடியாக, சம்பந்தப் பட்டோரின் வங்கி கணக்கில் செலுத்தப்படும். எனவே, வருமான வரி செலுத்து வோர், தங்கள் வங்கிகணக்குடன், 'பான்' எண்ணை கட்டாயம் இணைக்க வேண்டும்; 




இல்லையெனில், பிடித்தம் போக, மீதமுள்ள தொகை திரும்ப செலுத்தப்படாது. வரி செலுத்துபவர், தங்கள் கணக்கு உள்ள வங்கி கிளைக்கு சென்று, வங்கி கணக்குடன், 'பான்' எண் இணைக்கப்பட்டுஉள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்வ தற்கு, 'பான்' எண்ணுடன், ஆதார் எண்ணை, இம் மாத இறுதிக்குள் இணைக்க வேண்டும் என, வருமானவரி துறை சமீபத்தில் அறிவித்திருந்தது.

No comments:

Post a Comment

Please Comment