அரசு அறிமுகப்படுத்தியுள்ள புதிய செயலி திட்டத்தை பள்ளிகளில் முழுமையாக அமல்படுத்தும் வகையில், அனைத்துப் பள்ளிகளுக்கும் இணையதள வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வலியுறுத்தியுள்ளது.
தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாவட்ட பொதுக்குழுக் கூட்டம் திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் பி.ராஜ்குமார் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மு.பிரம்மநாயகம் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் செ.பால்ராஜ் வரவேற்றார். மாநில தலைவர் மூ.மணிமேகலை பேசியதாவது: கடந்த ஐனவரி மாதம் 22 முதல் 30-ஆம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டம் நடத்தினோம். மாணவர்கள் நலன் கருதி வேலைக்கு திரும்புங்கள் என முதல்வர் கேட்டுக்கொண்டதற்கிணங்க 31ஆம் தேதி வேலைக்கு திரும்பினோம்.
ஆனால் ஒழுங்கு நடவடிக்கை என்ற பெயரில் பணியிடமாறுதல், பணியிடைநீக்கம் போன்ற நடவடிக்கைகளை ஆசிரியர்கள் மீது மாநில அரசு எடுத்துள்ளது. இதில் பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு நன்றி. இதேபோன்று பணியிடமாறுதல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு இலக்கானவர்களுக்கும் ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்.
கிராமப்புற ஏழை எளிய மாணவர்களின் நலனை கருத்தில்கொண்டு, தொடக்கப் பள்ளிகளை மேல்நிலை, உயர்நிலைப் பள்ளிகளோடு இணைக்கும் நடவடிக்கையை அரசு கைவிட வேண்டும்.
பசநஸ்ரீட்ர்ர்ப்ள் என்ற செயலியை அறிமுகம் செய்துள்ள அரசு, ஆசிரியர் வருகைப்பதிவுக்கான சிரமத்தை களையும் வகையில் அனைத்து பள்ளிகளுக்கும் இணையதள வசதி செய்து கொடுக்க வேண்டும். அரசே முன்வந்து தேர்தல் பணியை ஆசிரியர்களுக்குக் கொடுக்கவில்லையென்றால் அதை மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம் என்றார்.
கூட்டத்தில் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் சிறை சென்றதுடன், தற்காலிக பணிநீக்கம் நடவடிக்கைக்கு ஆளான ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
மாவட்டத்தில் உள்ள பொதுக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். மாவட்டப் பொருளாளர் ஞா.பால்ராஜ் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment