தொடர்ந்து 30 மணி நேரம் கலைப் போட்டிகள்: உலக சாதனை முயற்சியில் பழனி மாணவர்கள் பங்கேற்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

தொடர்ந்து 30 மணி நேரம் கலைப் போட்டிகள்: உலக சாதனை முயற்சியில் பழனி மாணவர்கள் பங்கேற்பு

பழனியை சேர்ந்த மாணவ, மாணவிகள் சென்னையில் நடைபெற்ற 30 மணி நேர உலக சாதனைக்கான கலைப் போட்டிகளில் பங்கேற்று பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை பெற்றுள்ளனர். 




இந்திய சாதனை ரெக்கார்டு நிறுவனம், கின்னஸ் ரெக்கார்டு நிறுவனம் மற்றும் ஆசியன் ரெக்கார்டு நிறுவனம் ஆகிய அமைப்புகள் சார்பில் சென்னை கொடுங்கையூரில் உலக சாதனை முயற்சியாக தொடர்ந்து 30 மணி நேரம் சிலம்பம், யோகா, கராத்தே, பரதம், கர்நாடக சங்கீதம், நாட்டுப்புறப்பாடல், ஆடல் என பல்வேறு கலைப் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் தமிழகம் முழுவதுமிருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர். 




இதில் இந்திய தற்காப்புக் கலை மற்றும் விளையாட்டுக் கழகம் சார்பில் பழனி, உடுமலை மற்றும் கோவையை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். அவர்களுக்கு பதக்கம் மற்றும் உலக சாதனைக்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும் ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த போட்டியாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, சிறப்பு பரிசுகளும் வழங்கப்பட்டன. 




சிறந்த பயிற்சியாளர்களாக பழனியைச் சேர்ந்த சிலம்பம் வேங்கை நாதன், பாடலாசிரியர் பழனிச்சாமி, பரதக் கலைஞர் ஸ்ரீதேவி ஆகியோருக்கு கலாரத்னா விருதுகள் வழங்கப்பட்டன. வெற்றிபெற்ற மாணவ, மாணவியரை பெற்றோர், ஆசிரியர்கள், கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை பாராட்டினர்.

No comments:

Post a Comment

Please Comment