விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் பள்ளிக் கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்.
ஈரோடு, கோபி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவி வழங்கும் விழாவில் பங்கேற்ற அவர் மேலும் கூறியதாவது:
விளையாட்டு வீரர்களுக்கு வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் குறித்து கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. மாநில அரசு வழங்கும் ரூ.2000 உதவித்தொகை விடுபடாமல் அனைவருக்கும் கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.
மாநில அரசிடம் இருந்து 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை சிபிஎஸ்இ பள்ளிகள் தடையின்மைச் சான்று பெற வேண்டும். கட்டடங்களின் உறுதித்தன்மை குறித்து சான்று வழங்குதல் மாநில அரசின் பொறுப்பாகும்.
முன்பு, அரசுப் பள்ளியில் ஆங்கில வழிக் கல்வி இல்லாததால்தான் தனியார் கல்வி நிறுவனங்களுக்குப் பெற்றோர்கள் சென்றனர். தற்போது இலவசமாக ஆங்கில வழிக் கல்வி கிடைப்பதால் அரசுப் பள்ளிக்குத்தங்கள் குழந்தைகளை அனுப்ப பெற்றோர்கள் தயாராக உள்ளனர் என்றார்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்களின் தற்காலிகப் பணிநீக்கம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், காவல் துறையினர் பதிந்த வழக்குகள் ரத்து செய்யப்படாதது குறித்த கேள்விக்கு, மாநில அரசின் உள்துறை முதல்வரின் பொறுப்பில் உள்ளதால், அவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
Please Comment