திருவண்ணாமலை மாவட்டத்தில், 10 மற்றும் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தேர்வில் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க ஆர்வம் காட்டாத தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.'' என, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் கூறினார். இதுகுறித்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
அரசு பொதுத் தேர்வுகளில், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளின் மாணவ, மாணவியரும் அதிக மதிப்பெண்கள் பெற வேண்டும் என்ற நோக்கத்தில், விடுமுறை நாட்களில் கூட சிறப்பு வகுப்புகள் நடத்த வேண்டும் என்று அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டு இருந்தது. ஆனால், சில பள்ளிகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படவில்லை.
தேர்வு முடிவுகள் வெளியாகும்போது தேர்ச்சி விழுக்காடு குறைவாக இருந்தால், அதற்கு காரணமான பள்ளி நிர்வாகம் மீதும், சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
Please Comment