Jio Prime: மீண்டும் ஜியோ பிரைம் இலவசமாக வழங்கப்படுமா! - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Jio Prime: மீண்டும் ஜியோ பிரைம் இலவசமாக வழங்கப்படுமா!

வரும் மார்ச் 31-ம் தேதியுடன் நிறைவடைகின்ற ரிலையன்ஸ் ஜியோ பிரைம் , அடுத்த வருடத்திற்கு இலவசமாக நீட்டிக்கப்படுமா அல்லது பிரைம் ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்குமா ? என்ற எதிர்பார்ப்புகள் எழுந்துள்ளது. 






 கடந்த ஏப்ரல் 1, 2017 முதல் செயற்பாட்டுக்கு வந்த பிரைம் ரூபாய் 99 கட்டணத்தில் வழங்கப்பட்டு மார்ச் 31, 2018 வரை வழங்கிய நிலையில் கடந்த வருடம் பிரைம் சந்தா இலவசமாக மார்ச் 31, 2019 வரை நீட்டிக்கப்பட்டது.


 ஆனால் இந்த வருடம் ஜியோ ப்ரைம் என்ன செய்யப்போகின்றது. சாதாரண வாடிக்கையாளர்களை விட பிரைம் வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் டேட்டா நன்மை வேலிடிட்டி உள்ளிட்ட அம்சங்களை ஜியோ வழங்கி வாடிக்கையாளர்களை கவர்ந்தது. ஜியோ பிரைம் என்றால் என்ன ? கடந்த 2017 ஆம் வருடம் அறிமுகம் செய்த திட்டத்தில் பிரைம் ரீசார்ஜ் செய்யாத வாடிக்கையாளர்களை விட மிக கூடுதலான டேட்டா மற்றும் அழைப்பு பலன்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டது. 





சாதாரணமாக பிரைம் பயனள்ளர்களுக்கு தினசரி 1.5 ஜிபி டேட்டா கிடைக்கும் என்றால் பிரைம் உறுப்பினர் அல்லாதவர்களுக்கு 1 ஜிபி டேட்டா மட்டும் கிடைக்கும் என்பதுடன் ஜியோ நிறுவத்தின் செயலிகளான, ஜியோ டிவி, ஜியோ சவான் மியூசிக், ஜியோ நியூஸ் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்துவதில் சிக்கல்களை சந்திக்ககூடும். இந்நிலையில் ஜியோ ப்ரைம் சந்தா மார்ச் 31, 2019 உடன் நிறைவுக்கு வரவுள்ளதால், அடுத்த ஆண்டிற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் நிச்சியமாக ரூபாய் 99 கட்டணத்தை செலுத்தும்படி அறிவிக்க வாய்ப்புகள் உள்ளது. 




ஒருவேளை இலவசமாக அறிவித்தால் நல்லது தான். இந்தியாவின் மிகப்பெரிய 4ஜி நிறுவனமாக ஜியோ விளங்குகின்றது. இந்நிறுவனம் மொத்தமாக 28 கோடிக்கு அதிகமான வாடிக்கையாளர்களை கொண்டுள்ளது. 4ஜி சேவையில் வோல்ட்இ மூலம் பயனாளர்களுக்கு எவ்விதமான நிபந்தனையுமின்றி இலவச அழைப்புகள், மற்றும் அதிகப்படியான டேட்டா சலுகைகள் வழங்கி வருகின்றது. ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், ஜியோபோன், ஜியோ போன் 2 என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய இந்த பீச்சர் போன்களுக்கும் ஜியோ ப்ரைம் சலுகை வழங்கப்பட்டு வரும் நிலையில், 




இந்த வருடம் மாறியுள்ள டெலிகாம் சந்தையின் போட்டி, வருமானம் சரிவு மற்றும் போட்டியாளர்களை ஜியோ சமாளிக்க வேண்டி உள்ளதால் ஜியோ பிரைம் நிச்சியமாக இந்த வருடம் ரூபாய் 99 கொண்டு ரீசார்ஜ் செய்ய வேண்டியிருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஜியோ பிரைம் இலவசமாக வருமா..? வராதா..? உங்கள் கருத்தை மறக்காம பதிவு பன்னுங்க..

No comments:

Post a Comment

Please Comment