சிறைத் துறையில் துப்புரவுப் பணி: மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்' - ThulirKalvi Blogs

Latest

Search This Site

சிறைத் துறையில் துப்புரவுப் பணி: மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்'

சிறைத் துறையில் துப்புரவுப் பணி: மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்'






சிறைத் துறையில் துப்புரவுப் பணிக்கு தகுதியானோர் மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக திருநெல்வேலி மாவட்ட நிர்வாகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: பாளையங்கோட்டை மத்திய சிறை கட்டுப்பாட்டில் உள்ள நான்குனேரி பார்ஸ்டல் பள்ளி, கொக்கிரகுளம் பெண்கள் தனிக் கிளைச்சிறை, அம்பாசமுத்திரம், தென்காசி, சங்கரன்கோவில் கிளைச் சிறைகளில் காலியாக உள்ள தலா ஒரு துப்புரவுப் பணியாளர் பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இரு பாலரும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பாக ஓ.சி. பிரிவினருக்கு 18 - 30 வயதுக்குள்ளும், 






பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவுக்கு 18 - 32 வயதுக்குள்ளும், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு 18 - 35 வயதுக்குள்ளும் இருக்க வேண்டும். கல்வித் தகுதியாக எழுதப் படிக்கத் தெரிந்திருக்க வேண்டும். பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஒட்டிய விண்ணப்பம், சாதிச் சான்று நகல், ஆதார் அட்டை நகல், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தால் அதன் விவரம் ஆகியவற்றை இணைத்து, கண்காணிப்பாளர் அலுவலகம், மத்திய சிறை, பாளையங்கோட்டை - 627 002' என்ற முகவரிக்கு மே 17-க்குள் அனுப்பலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.







சிறைத் துறையில் துப்புரவுப் பணி: மே 17-க்குள் விண்ணப்பிக்கலாம்'

No comments:

Post a Comment

Please Comment