தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு முதல்வர் வாழ்த்து
முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக வீராங்கனை ேகாமதி மாரிமுத்துவுக்கு அனுப்பிய வாழ்த்து: திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சேர்ந்த தாங்கள் தற்பொழுது கத்தார் நாட்டில் தோஹா நகரில் நடைபெற்று வரும் 2019ம் ஆண்டிற்கான ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தய போட்டியில், தங்கப்பதக்கம் வென்று சாதனை புரிந்துள்ளீர்கள் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆசிய தடகள போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற தங்களுக்கு என் சார்பாகவும், தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். தாங்கள் இதுபோன்று சர்வதேச அளவில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்து கொண்டு, மேலும் பல வெற்றிகள் பெற்று, இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்திட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
தங்கம் வென்ற வீராங்கனை கோமதி மாரிமுத்துக்கு முதல்வர் வாழ்த்து

No comments:
Post a Comment
Please Comment