சுரங்கத்துறையின்கீழ் செயல்பட்டு வரும் "Geological Survey of India" நிறுவனத்தில் காலியிடங்கள் உள்ள 25 ஓட்டுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து வரும் 12 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Driver (Ordinary Grade Group - C)
காலியிடங்கள்: 25
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
வயதுவரம்பு: 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக மற்றும் கனரக வாகனங்கள் ஓட்டுநர் உரிமம் பெற்று 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
www.gsi.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து விரைவு, சாதாரண அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: The Addidional Director General, Geological Survery of India, North Eastern Region, Lower Moti Nagar, Lumsohpoh, Shillong - 793 014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.gsi.gov.in என்ற வலைத்தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர தேதி: 12.04.2019

No comments:
Post a Comment
Please Comment