Managing Trainee work at Central Government Institute மத்திய அரசு நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

Managing Trainee work at Central Government Institute மத்திய அரசு நிறுவனத்தில் மேலாண்மை டிரெய்னி வேலை

இந்திய அணுசக்தி துறையின் கீழ் செயல்பட்டு வரும் மினி ரத்னா நிறுவனமான "Indian Rare Earths Ltd" நிறுவனத்தில் நிரப்பப்பட உள்ள மேலாண்மை டிரெய்னி வேலைக்கு தகுதியானவர்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 




 பணி: Management Trainees காலியிடங்கள்: 20 சம்பளம்: மாதம் ரூ.16,400 - 40,500 வயதுவரம்பு: 31.12.2018 தேதியின்படி 28 வயதிற்குள் இருக்க வேண்டும். தகுதி: பொறியியல் துறையில் 60 சதவீத மதிப்பெண்களுடன் மெக்கானிக்கல், மைனிங், எலக்ட்ரிக்கல், கெமிக்கல், மினரல் பிரிவில் பிஇ அல்லது பி.டெக் முடித்தவர்கள், நிதியியல் துறையில் சிஏ, சிஎம்ஏ அல்லது 60 சதவீத மதிப்பெண்களுடன் பி.காம் முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பக் கட்டணம்: 



பொது பிரிவினருக்கு ரூ.250. இதனை ஆன்லைன் மூலம் செலுத்த வேண்டும். ஓபிசி, எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவத்தினர், பெண்களுக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். 




விண்ணப்பிக்கும் முறை: www.irel.co.in என்ற வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 16.06.2019 மேலும் முழுமையான விவரங்கள் அறிய https://www.jobapply.in/IREL/2019/MTS/Adv-Eng.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 12.04.2019

No comments:

Post a Comment

Please Comment