புதுச்சேரி பல்கலை நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

புதுச்சேரி பல்கலை நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு

புதுச்சேரி பல்கலை நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப தேதி நீட்டிப்பு 





இதுகுறித்து, புதுச்சேரி பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:




புதுச்சேரி பல்கலைக்கழக நுழைவுத் தேர்வுகளுக்கு இணைய தளம் மூலம் விண்ணப்பிப்பது நேற்றுடன் (ஏப்ரல் 22ம் தேதி) முடிவு பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. புதுச்சேரி பல்கலைக்கழகத்தில், நடப்பு கல்வியாண்டிற்கான (2019-20) நுழைவுத் தேர்வு, வரும் ஜூன்மாதம் 7, 8 மற்றும் 9ஆகியதேதிகளில் நாடு முழுவதும் நடக்க உள்ளது.இதற்கான விண்ணப்பங்கள், கடந்த மார்ச் 22ம் தேதி முதல் இணையதளம் மூலம் பெறப்பட்டு வந்தது.பல்கலைக்கழக நுழைவுத் தேர்விற்கு இணையதளம்மூலம்விண்ணப்பிப்பது இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டுவிண்ணப்பிக்கும் தேதியை வருகின்ற மே மாதம் 6ம் தேதி வரை நீட்டித்து, துணைவேந்தர் குர்மீத் சிங் உத்தரவிட்டுள்ளார். 






நுழைவுத் தேர்வு விண்ணப்பங்களை  www.pondiuni.edu.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.நுழைவுத் தேர்வு குறித்த கூடுதல் விவரங்களை தருவதற்காகவும், சந்தேகங்களை தெளிவுபடுத்தவும், பல்கலைக்கழகநிர்வாக வளாகத்தில் இயங்கி வரும் உதவி மையத்தை 0413 - 2654500 மற்றும் 06382349524 என்ற மொபைல்போன் எண்ணிலும், admissions.pu@pondiuni.edu.in என்ற இ- மெயில் முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம். இந்தி மற்றும் ஆங்கில மொழிகளில் கூடுதல் விவரங்களை பெறுவதற்கு, மும்பையில் இயங்கி வருகின்ற உதவி மையத்தை 022-62507705 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு பெறலாம். இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Please Comment