நீலகிரியை எரிக்க காத்திருக்கும் காடுகளின் நெருப்பு பூக்கள்.!! பூவின் அழகை ரசிக்கும் பொதுமக்கள்.!! புகைப்பட தொகுப்புகள்.!!
தமிழகத்தில் பல சுற்றுலா தளங்கள் உள்ளன. இந்த சுற்றுலா தளங்களில் ஒவ்வொரு இடத்திற்கும் ஒவ்வொரு பெருமையும்., குறிப்பிட்ட காலத்தில் சென்று பார்க்கும் போது அங்குள்ள இயற்கை காட்சிகள் எழில் கொஞ்சும் அழகையும்., மனதிற்கும் உடல் நலத்திற்கும் புத்துணர்ச்சி அளிக்கும் வகையிலும் இருக்கும்.
தமிழகத்தில் உள்ள நீலகிரி மாவட்டம் மலை சார்ந்த பகுதி ஆகும்.
இந்த மலைப்பகுதியானது மிகவும் உயரமாக இருக்கும் காரணத்தால்., சீசன் நேரங்களில் அதிகளவு பூக்கள் பூக்கும். இந்த பூக்களின் அழகை காணுவதற்கென மக்கள் கூட்டமானது அலைமோதும்.
அந்த வகையில்., தற்போது நீலகிரி மாவட்டத்தில் உள்ள குன்னூர் - மேட்டுப்பாளையம் சாலையில் உள்ள பகுதிகளில் அதிகளவு "பிளேம் ஆப் பாரஸ்ட்" என்ற வகையை சார்ந்த பூக்கள் பூத்து குலுங்கி வருகிறது.
இந்த பூக்கள் அன்றைய காலத்தில் நடைபெற்ற ஆங்கிலேயர்களின் ஆட்சி காலத்தில்., நீலகிரி மாவட்டத்தில் உள்ள பகுதிகளில் வளர்க்கப்பட்டது. இந்த பூக்களானது தீயை போல காட்சியளிக்கும்.
இந்த பூக்கள் பெரும்பாலும் மே மாதத்தின் போது பூக்கும் என்ற காரணத்தால்.,
இந்த பூக்களுக்கு "மே பிளவர்" என்ற பெயரும் உண்டு. நீலகிரி மலைப்பகுதியில் இருக்கும் தேயிலை தோட்டங்கள்., பசுமை போர்த்திய வனப்பகுதிகளில் அதிகளவு பூத்து குலுங்கும் அழகை காணுவதற்கு மக்கள் கூட்டமானது அலைமோதிய வண்ணம் உள்ளது.




No comments:
Post a Comment
Please Comment