பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லங்கள் உரிமம் பெறாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லங்கள் உரிமம் பெறாத விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் கலெக்டர் எச்சரிக்கை

பதிவு செய்யப்படாத குழந்தைகள் இல்லங்கள் மற்றும் உரிமம் பெறாத விடுதிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்துள்ளார். 




இது குறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:




இளைஞர்நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின்படி பராமரிப்பும் பாதுகாப்பும் தேவைப்படும் குழந்தைகளை தங்க வைத்திருக்கும் நிறுவனங்கள் மட்டுமே குழந்தைகள் இல்லங்களாக கருதப்படும். இந்நிறுவ னங்கள் இளைஞர் நீதி (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட வேண்டும். 




தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தை கள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்லங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் விதிகளின்படி, அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், மதம் சார்ந்த நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகள் போன்ற அனைத்து தனியார் நிறுவனங்களினாலும் நடத்தப்பட்டு வரும் குழந்தைகள் மற்றும் பெண்களுக்கான தங்கும் இல்லங்கள் மற்றும் விடுதிகள், விடுதிகள் சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உரிமம் பெறப்பட வேண்டும். 




குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் செயல்படுவது தொடர்பாக நடை முறையிலுள்ள சட்டங்கள், அரசாணைகள் மற்றும் வழிகாட்டு நெறிமு றைகளில் குறிப்பிட்டுள்ளவாறு குறைந்தபட்ச அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் இதர வசதிகள் பேணப்படு வது அனைத்து நிறுவனங்களாலும் உறுதி செய்யப்படல் வேண்டும். மேற்கண்டவாறு உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படாத அனைத்து வகை தனியார் நிறுவனங்களின் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் உரிமம் பெறாத அனைத்து வகை தனியார் நிறுவனங்களின் விடுதிகளை நடத்தும் நிர்வாகிகளுக்கு உரிய சட்டத்தின்படி சிறை தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 



இளைஞர் நீதிச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளவாறு குழந்தைகளை தங்க வைத்திருக்கும் குழந்தைகள் இல்லங்களை, இளைஞர் நீதிச் (குழந்தைகள் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் கீழ் பதிவு செய்திட மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை அணுகியும், விடுதிகளை, தமிழ்நாடு பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கும் விடுதிகள் மற்றும் இல்ல ங்கள் (ஒழுங்குமுறை) சட்டம் மற்றும் விதிகளின் கீழ் உரிமம் பெறுவதற்கு மாவட்ட சமூக நல அலுவலகம் அல்லது மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகினை அணுகியும் தொடர்புடைய நிறுவனங்கள் வருகிற 18ம்தேதிக்குள் விண்ணப்பங்கள் அளிக்கலாம். 



பதிவு, உரிமம் பெறா மல் செயல்படும் குழந்தைகள் இல்லங்கள் மற்றும் விடுதிகள் மீது மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சட்டப்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனத் தெரி வித்துள்ளார்.

No comments:

Post a Comment

Please Comment