ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டு போட முடியாது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை - ThulirKalvi Blogs

Latest

Search This Site

ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டு போட முடியாது தேர்தல் ஆணையம் எச்சரிக்கை

ஆள்மாறாட்டம், கள்ள ஓட்டு போட முடியாது என தேர்தல் ஆணயைம் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.




தமிழகத்தில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் வாக்களிக்கவரும் வாக்காளர்கள் புகைப்படத்துடன் கூடிய ஏதேனும் ஒரு அடையாள அட்டையில் சம்பந்தப்பட்ட வாக்காளர்களின் புகைப்படம் இருப்பதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் தேர்தல் அதிகாரிகள் மற்றும் வாக்குச்சாவடி தலைமை அதிகாரி விசாரணை செய்த பிறகு வாக்களிக்க செல்ல முடியும். 



வாக்குச்சாவடியில் உங்களுக்கு தெரிந்த பூத் ஏஜென்ட்டுகள் இருப்பார்கள். எனவே இவை அனைத்தையும் மீறி ஆள்மாறாட்டமோ கள்ள ஓட்டோ போட முடியாது. மேலும் பதட்டமான வாக்குச்சாவடிகள் வீடியோ மூலம் கண்காணிக்கப்படுகிறது. என, தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

Please Comment