வேளாண் பல்கலையில் 'ஆன்லைன்' கலந்தாய்வு - ThulirKalvi Blogs

Latest

Search This Site

வேளாண் பல்கலையில் 'ஆன்லைன்' கலந்தாய்வு

பிளஸ்2 தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகவுள்ள சூழலில், மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு செயல்பாடுகள், தமிழ்நாடு வேளாண் பல்கலையில் தீவிரமாக நடந்து வருகின்றன. 




இதற்கென சிறப்பு கமிட்டி ஏற்படுத்தப்பட்டுள்ளது.கடந்த கல்வியாண்டில், வேளாண் பல்கலை மாணவர் சேர்க்கை முதன்முறையாக, ஆன்லைன்' வழியாக நடத்தப்பட்டது. நடப்பு கல்வியாண்டிலும், ஆன்லைன் மூலம் மட்டுமே நடத்தப்படும் என பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆன்லைன் கலந்தாய்வு எனும் போது, ஒரு சிறிய பதிவை கூட மிகவும் கவனமாக கையாள வேண்டியது அவசியம். 



இதனால், பல்கலையில் இப்பணிகளை மேற்கொள்ள, தொழில்நுட்ப வல்லுனர்கள் மற்றும் பல்கலை அதிகாரிகள் அடங்கிய, சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது.பல்கலை டீன் கல்யாணசுந்தரம் கூறுகையில், பிளஸ்2 தேர்வு முடிவுகள், 19ம் தேதி வெளியாகும் என கூறியிருப்பதால், அதை அடிப்படையாக கொண்டு, பணிகளை மேற்கொண்டு வருகிறோம். 



விரைவில் விண்ணப்ப வினியோகம், கலந்தாய்வு குறித்த அறிவிப்பு வெளியாகும். ''இக்கல்வியாண்டிலும் ஆன்லைன் மூலமே, கலந்தாய்வு நடக்கும். மாதிரி விண்ணப்பங்களை பதிவு செய்து, சரிபார்ப்பு பணிகள் நடந்து வருகின்றன,'' என்றார். 


இரண்டு படிப்புகள் நிறுத்தம்?பல்கலை அதிகாரி ஒருவர் கூறுகையில், மாணவர் சேர்க்கை குறைவாகவுள்ள, இரண்டு படிப்புகள் குறித்து ஆய்வு செய்ய, சிறப்பு கமிட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆய்வு அறிக்கையின் படி, இப்பாடத்திட்டங்களில் உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படவுள்ளன. மாணவர்களின் நலன் கருதி, குறிப்பிட்ட இரண்டு பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கை, தற்காலிகமாக நிறுத்தப்பட வாய்ப்புள்ளது. 


இது குறித்த தகவல்கள், விரைவில் தெரிவிக்கப்படும்' என்றார்.

No comments:

Post a Comment

Please Comment