மும்பையில் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கும் கிளி - ThulirKalvi Blogs

Latest

Search This Site

மும்பையில் தொழில்நுட்பக் கருவிகளை இயக்கும் கிளி

மும்பையில் சிஜின்-லில்லி தம்பதியின் திருமணப் பரிசாக வந்த சாம்பல் நிற ஆப்பிரிக்க கிளிக்கு ஸ்னைபர் என பெயரிடப்பட்டு உள்ளது. மனிதர்களுடன் உரையாடக் கூடிய அது, அலெக்ஸா போன்ற குரல் கட்டளைக்கு ஏற்ப செயல்படும் கருவிகளுடனும் உரையாடுகிறது. 



கால் சிஜின் ((Call Shijin))என கட்டளையிடும் கிளி, தொடர்புப் பட்டியலில் உள்ள சிஜின்தானா? என உறுதிப்படுத்த அலெக்ஸா கோரும் போது 'யெஸ்' ((Yes))என ஆங்கிலத்தில் பதிலளிக்கிறது. தம்பதியினரில் யாரேனும் வீடியோ அழைப்பில் பேசிக் கொண்டிருந்தால், அவர்களின் தோள்பட்டையில் அமர்ந்து 'ஹுஸ் தெட்?' ((Who's that))அதாவது யாரது என திரையைப் பார்க்கிறது. அலெக்ஸா விடம் 'த ரிட்டில்' ((The Riddle))என்ற பாடலை இசைக்கச் சொல்வது, 



நேரம் என்ன? எனக் கேட்பது என பல உரையாடல்களையும் அந்த கிளி மேற்கொள்கிறது. அத்துடன் தம்பதி ஐ பேட் பயன்படுத்தினால் அதை தன் அலகால் பறித்து திரையை ஸ்வைப் செய்து படங்களைப் பார்க்கிறது.

No comments:

Post a Comment

Please Comment