It's too late to go to the Exam room! The Kerala student made a glorious act. Viral on the Internet தேர்வு அறைக்கு செல்ல நேரமாகிவிட்டது.! கேரள மாணவி செய்த அட்டகமான செயல்.!! இணையத்தில் வைரல்.!!
இன்றளவில் உள்ள சூழ்நிலையில் பெண்கள் பல தடைகளை தாண்டி பள்ளிக்கூடத்திற்கு சென்று பயின்று வருகின்றனர். அந்த வகையில்., படிக்கும் மாணவ - மாணவியர்களுக்கு முக்கியமான ஒன்றாக தேர்வுகள் கருதப்படுகிறது.
அவர்கள் தேர்வு எழுதி பின்னர் அதில் வரும் மதிப்பெண்கள் மூலமாக அவர்களின் எதிர்கால படிப்பை தேர்ந்தெடுத்து அவர்களின் வாழ்நாளை நிலைநாட்டுகின்றனர். தேர்வுகளை எழுத செல்லும் மாணவர்கள் தேர்வு மையத்திற்கு விரைவாக செல்ல வேண்டும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று.
கேரள மாநிலத்தில் உள்ள மாணவி தேர்வு அறைக்கு செல்ல நேரமானதால்., குதிரையில் அதிவேகத்தில் பறந்து தேர்வு அறைக்கு சென்றுள்ளார். அது குறித்த வீடியோ கட்சிகளந்து வைரலாகி வருகிறது.
கேரள மாநிலத்தில் உள்ள திரிசூரில் 10 வகுப்பு பயின்று வரும் மாணவி தேர்விற்கு நேரமாகிவிட்டதால்., குதிரை சவாரி செய்து தேர்வு அறைக்கு விரைந்துள்ளார். இந்த காட்சியை சாலை வழியாக சென்ற வாலிபர் ஒருவர்., காட்சிப்பதிவு செய்து தனது இணையத்தில் பதிவிடவே., அது வைரலாக துவங்கியது.
இந்த மாணவி பள்ளி பள்ளி சீருடையுடன் குதிரை சவாரி செய்து தேர்வு அறைக்கு சரியான நேரத்தில் சென்று பரீட்சை எழுதியுள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகவே., இதனை கண்ட பலர் அந்த மாணவியை பாராட்டி வருகின்றனர்.


No comments:
Post a Comment
Please Comment